அரசியல் கட்சியில் இணையவது குறித்து நடிகை திரிஷாவே அளித்த பதில்!
திரிஷா
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக தனக்கென ஒரு பெரிய ரசிகர்கள் கூட்டத்தை உருவாகி வைத்திருப்பவர் நடிகை திரிஷா.
அனைத்து முன்னணி நடிகர்களுக்கும் ஜோடியாக நடித்துள்ள திரிஷா, சில காலங்களாக தொடர்ச்சியாக படங்களில் பார்க்க முடிவதில்லை.
ஆனால் தற்போது அவர் நடிப்பில் பெரிய வரலாற்று திரைப்படமாக உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் விரைவில் வெளியாக இருக்கிறது.

அரசியல் கட்சி
இந்நிலையில் நடிகை திரிஷா காங்கிரஸ் அரசியல் கட்சியில் இணைய போவதாக பரபரப்பான தகவல்கள் கடந்த சில நாட்களாக இணையத்தில் பரவி வந்தன.
இதற்கிடையே தற்போது நடிகை திரிஷாவே இது குறித்து விளக்கமளித்து இருக்கிறார். அதன்படி “கொஞ்சமும் உண்மையில்லாத தகவல் இது, எப்படி இப்படி ஒரு செய்தி பரவியது என்று எனக்கே தெரியல.
எனக்கு அரசியலில் சேரும் எண்ணம் துளியுமில்லை” என தான் குறித்து இணையத்தில் பரவிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் திரிஷா.

விமான நிலையம் மூலம் பல கோடி சம்பாதிக்கும் நடிகர் சூர்யா