தளபதி 67 குறித்து முதல் முறையாக பேசிய திரிஷா.. அதுவும் என்ன சொன்னார் தெரியுமா
தளபதி 67
வாரிசு படத்தை தொடர்ந்து விஜய் நடிப்பில் உருவாகவிருக்கும் திரைப்படம் தளபதி 67. லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ள இப்படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து சஞ்சய் தத், பிரித்விராஜ், கவுதம் மேனன், அர்ஜுன், திரிஷா ஆகியோர் நடிக்கப்போவதாக தகவல் வெளியானது.
பதில் கொடுத்த திரிஷா
இதில் நடிகை திரிஷா பல ஆண்டுகளுக்கு பின் மீண்டும் விஜய்க்கு ஜோடியாக நடிக்கப்போகிறார் என்று கூறப்பட்டது.
இந்நிலையில், இது குறித்து அண்மையில் பொன்னியின் செல்வன் படத்தின் ப்ரோமோஷனில் இருந்த நடிகை திரிஷாவிடம் கேள்வி கேட்டப்பட்டது.

இதற்க்கு பதிலளித்த திரிஷா இந்த பேட்டியில் பொன்னியின் செல்வனை பற்றி மட்டும் தான் பேசவேண்டும் என்று ஸ்ட்ரிக்ட்டாக சொல்லிவிட்டார்கள் என்று கூறியுள்ளார்.