லியோ
விஜய்யின் லியோ படத்தில் த்ரிஷா தான் ஹீரோயின் என அறிவிக்கப்பட்டு அவரை காஷ்மீர் ஷூட்டிங்கிற்கு படக்குழு அழைத்து சென்ற நிலையில் அவர் சில நாட்களிலேயே சென்னைக்கு திரும்பி வந்துவிட்டதாக தகவல் பரவியது.
அதனால் அவரது ரோல் மிக சிரியதா அல்லது அவர் இயக்குனரிடம் சண்டை போட்டுவிட்டு கிளம்பிவிட்டாரா என பல வதந்திகள் கிசுகிசுக்கப்பட்டது.
லியோ படத்தை விட்டு அவர் வெளியேறிவிட்டார் என்றும் தகவல் பரவியது.

த்ரிஷா விளக்கம்
இப்படி வரும் எல்லா வதந்திகளுக்கு த்ரிஷா தற்போது முற்றுப்புள்ளி வைத்து இருக்கிறார்.
விஜய் உடன் அவர் இருக்கும் வீடியோ ஒன்றை பகிர்ந்து அவர் படத்தில் இருப்பதை மீண்டும் உறுதி செய்து இருக்கிறார். அதனால் தற்போது வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு இருக்கிறது.
This is so good ❤️??
— Trish (@trishtrashers) February 8, 2023
மும்பையில் புது வீடு வாங்கினாரா சமந்தா? தலைசுற்ற வைக்கும் விலை