விஜய்யுடன் நடிகை திரிஷாவை தொடர்புபடுத்தி பேசிய நயினார் நாகேந்திரன்.. கண்டனம் தெரிவித்த திரிஷா

By Kathick Feb 16, 2026 08:55 AM GMT
Report

விஜய்

நடிகர் விஜய் தற்போது அரசியலில் முழுமையாக களமிறங்கி திமுக, அதிமுக, பாஜக ஆகிய கட்சிகள் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். விஜய் பேசுவதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் மற்ற கட்சியை சேர்ந்தவர்களும் பேசி வருகிறார்கள்.

விஜய்யுடன் நடிகை திரிஷாவை தொடர்புபடுத்தி பேசிய நயினார் நாகேந்திரன்.. கண்டனம் தெரிவித்த திரிஷா | Trisha Condemned To Nainar Nagendran Speech

இதில் தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், தவெக தலைவர் விஜய்யுடன் நடிகை திரிஷாவை தொடர்புபடுத்தி பேசியது பெரும் சர்ச்சையானது. இது பேசுபொருளாக மாறிய நிலையில், மற்ற கட்சியை சேர்ந்தவர்களிடமும் கேள்வி கேட்கப்பட்டது.

இந்த நிலையில், நயினார் நாகேந்திரனின் பேச்சுக்கு நடிகை திரிஷா கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

விஜய்யுடன் நடிகை திரிஷாவை தொடர்புபடுத்தி பேசிய நயினார் நாகேந்திரன்.. கண்டனம் தெரிவித்த திரிஷா | Trisha Condemned To Nainar Nagendran Speech

3 நாட்களில் மை லார்ட் படம் செய்த வசூல்.. எவ்வளவு தெரியுமா

3 நாட்களில் மை லார்ட் படம் செய்த வசூல்.. எவ்வளவு தெரியுமா

நடிகை திரிஷா கண்டனம்

இதுகுறித்து நடிகை திரிஷாவின் வழக்கறிஞர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தனிப்பட்ட வாழ்க்கையை பொதுவெளியில் விவாதிப்பது சரியில்லை. அருவருக்கத்தக்க வகையில் நயினார் நாகேந்திரன் பேசியுள்ளார்.

மாநில அரசியல் கட்சியில் உயர் பதவியில் இருக்கும் ஒருவரால் இதுபோன்ற விரும்பத்தகாத, பொருத்தமற்ற கருத்துகள் தெரிவிக்கப்படும் என நடிகை திரிஷா ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை.

விஜய்யுடன் நடிகை திரிஷாவை தொடர்புபடுத்தி பேசிய நயினார் நாகேந்திரன்.. கண்டனம் தெரிவித்த திரிஷா | Trisha Condemned To Nainar Nagendran Speech

நடிகை திரிஷா எந்த அரசியல் கட்சியுடனும் தொடர்புடையவர் அல்ல, அவ்வாறு தொடர்புபடுத்திக்க விரும்பவில்லை. அரசியலில் அவர் எப்போதும் நடுநிலையான நிலைப்பாட்டை உடையவர்.

நடிகை திரிஷாவின் பெயரை, அவருடன் தொடர்பில்லாத விஷயங்களில் சேர்க்க வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறது" என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், நயினார் நாகேந்திரன் தற்போது வருத்தம் தெரிவித்துள்ளார். "நான் பேசியதில் யாருக்கேனும் வருத்தம் இருந்தால், மனப்பூர்வமாக வருத்தம் தெரிவித்து கொள்கிறேன்" என கூறியுள்ளார்.  

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US