மன்சூர் அலி கான் சர்ச்சையில் நடிகை த்ரிஷா எடுத்த அதிரடி முடிவு.. என்ன காரணம்?
மன்சூர் அலி கான் த்ரிஷா பற்றி அளித்த பேட்டி பெரிய சர்ச்சை ஆனது. லியோ படத்தில் த்ரிஷா உடன் பெட்ரூம் சீனில் நடிக்கலாம் என பார்த்தால் அவரை என் கண்ணில் கூட காட்டவில்லை என மன்சூர் பேசி இருந்ததற்கு பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
அதனால் மன்சூர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது. அவரும் ஆஜராகி இலக்கம் அளித்தார்.
நடவடிக்கை வேண்டாம்
இந்த விவகாரம் பற்றி த்ரிஷாவுக்கும் போலீஸ் கடிதம் அனுப்பி இருந்தது. மன்சூர் அலி கான் இன்ஸ்டாக்ராமில் அறிக்கை வெளியிட்டு த்ரிஷாவிடம் மன்னிப்பு கேட்டிருந்தார்.
இந்நிலையில் போலீசுக்கு த்ரிஷா அனுப்பி இருக்கும் பதில் கடிதத்தில் மன்சூர் மீது நடவடிக்கை வேண்டாம் என கூறி இருக்கிறாராம். அவர் மன்னிப்பு கேட்டுவிட்டதால் த்ரிஷா இப்படி ஒரு முடிவை எடுத்திருக்கிறார்.

வெளிநாட்டவர்களில் சிலரது பாஸ்போர்ட்களை ரத்து செய்யும் வகையில் சட்டத்தில் மாற்றங்கள்: ஜேர்மனி திட்டம் News Lankasri
