அனிமல் படத்தை பாராட்டிய த்ரிஷா.. விளாசிய நெட்டிசன்கள்! பதிவை நீக்கிய த்ரிஷா
ரன்பீர் கபூர் மற்றும் ராஷ்மிகா ஆகியோர் நடித்து இருக்கும் அனிமல் படம் இந்த வாரம் திரைக்கு வந்த நிலையில் இரண்டே நாட்களில் 236 கோடி ருபாய் வசூலித்து சாதனை படைத்து இருக்கிறது.
படத்திற்கு கலவையான விமர்சனங்கள் தான் கிடைத்து கொண்டிருக்கிறது. ஒரு தரப்பு படத்தை பாராட்டினாலும், மற்றொரு தரப்பினர் தாக்கி பேசி வருகின்றனர். இயக்குனர் சந்தீப் ரெட்டியின் முந்தைய படங்களான அர்ஜுன் ரெட்டி, கபீர் சிங் போன்ற படங்களுக்கு வந்தது போலவே நெட்டிசன்கள் இந்த படத்தையும் கமெண்ட் செய்கின்றனர்.
பதிவை நீக்கிய த்ரிஷா
நடிகை த்ரிஷா அனிமல் படத்தை 'Cult' என குறிப்பிட்டு பதிவிட்டு இருந்தார். அதை பார்த்துவிட்டு நெட்டிசன்கள் அவரை வறுத்தெடுத்துவிட்டனர்.
ஒரு வாரத்திற்கு முன்பு மன்சூர் அலிகான் விவகாரத்தில் பெண்களின் கண்ணியம் பற்றி பேசிய த்ரிஷா தற்போது இந்த படத்தை cult என பாராட்டி இருப்பது வேடிக்கையாக இருப்பதாக நெட்சன்கள் ட்ரோல் செய்தனர்.
இந்நிலையில் த்ரிஷா அந்த பதிவை நீக்கிவிட்டார். இருப்பினும் அவரை நெட்டிசன்கள் தொடர்ந்து ட்ரோல் செய்து கொண்டு தான் இருக்கின்றனர்.

எதிர்பாரா பேரழிவு; மெகா நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு - 3 லட்சம் பேர் உயிரிழக்கும் அபாயம் IBC Tamilnadu
