நடிகை திரிஷாவை திருமணம் செய்யவிருந்த பிரபல தொழிலதிபர்.. தற்போது இந்த 37 வயது நடிகையை தான் காதலிக்கிறாரா
நடிகை திரிஷா
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் திரிஷா. பொன்னியின் செல்வன் வெற்றிக்கு பின் தொடர்ந்து பல படங்களை கைவசம் வைத்துள்ளார்.
அஜித்துடன் விடாமுயற்சி, கமலுடன் தக் லைஃப், சிரஞ்சீவியுடன் விஸ்வம்பரா, மோகன்லாலுடன் ராம் என பல முன்னணி நட்சத்திரங்களின் திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதுமட்டுமின்றி லியோ படத்தை தொடர்ந்து மீண்டும் விஜய்யுடன் இணைந்துள்ளார். Goat படத்தில் இடம்பெற்றுள்ள ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் திரிஷா நடனமாடியுள்ளார் என கூறப்படுகிறது.

கொண்டாட்டம் என்றால் இப்படி இருக்கனும், ரீ-ரிலீஸ் ஆன விஜய்யின் கில்லி- வெளிநாட்டில் எங்கே பாருங்க, வீடியோ
தென்னிந்திய சினிமாவில் மட்டுமல்லாமல் பாலிவுட்டில் இருந்து திரிஷாவிற்கு பட வாய்ப்புகள் வருகிறது என தகவல் வெளியாகியுள்ளது. 40 வயதாகியும் முன்னணி நடிகையாக முன்னணி நடிகர்களின் படத்தில் பிசியாக நடித்து வருகிறார்.
திரிஷா நிச்சயதார்த்தம்
நடிகை திரிஷாவிற்கு வருண் மணியன் எனும் தொழிலதிபருடன் கடந்த 2015ஆம் ஆண்டு நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அந்த நிச்சயதார்த்த புகைப்படங்கள் கூட இணையத்தில் வைரலானது. ஆனால், இருவருக்கும் இடையே என்ன நடந்தது என தெரியவில்லை, திடீரென இருவரும் பிரிந்துவிட்டனர்! திருமணமும் நின்றுபோனது.
பிரபல நடிகையுடன் டேட்டிங்
இந்த நிலையில், திரிஷாவை திருமணம் செய்யவிருந்த வருண் மணியன் என்பவர் பிரபல நடிகை பிந்து மாதவியை டேட்டிங் செய்து வருகிறார் என கூறப்பட்டது. இதுகுறித்து நடிகை பிந்து மாதவி பேசுகையில், நாங்கள் இருவரும் டேட்டிங் செய்து வருகிறோம் என்று உறுதிப்படுத்தினாராம்.
மேலும் திரிஷாவை விட்டு வருண் பிரிந்த பின் தான் நாங்கள் இருவரும் டேட்டிங் செய்து வருகிறோம். திரிஷாவுடன் அவர் உறவில் இருக்கும்போது, நான் அவரை டேட்டிங் செய்யவில்லை என்றும் கூறியுள்ளாராம். இது கடந்த ஆண்டு வந்த தகவல் என்றாலும் தற்போது நெட்டிசன்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

பங்கர் பஸ்டராக உருவெடுக்கும் இந்தியாவின் அக்னி ஏவுகணை - சீனா, பாகிஸ்தானுக்கு கடும் அச்சுறுத்தல் News Lankasri

அஜித் குமார் மரண வழக்கில் கைதான 5 காவலர்களையும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு News Lankasri

கெட்டவார்த்தை பேசினால் அவனுக்கு பிடிக்காது; திட்டிய ஆசிரியர் - மாணவன் தற்கொலையால் கதறும் தாய்! IBC Tamilnadu
