இன்று ரூ. 12 கோடி சம்பளம் வாங்கும் திரிஷா, முதன் முதலில் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா! இதோ பாருங்க
திரிஷா
இன்று தென்னிந்திய சினிமாவில் மிகவும் பிசியாக நடித்துக்கொண்டிருக்கும் முன்னணி கதாநாயகிகளில் ஒருவர் திரிஷா. 20 ஆண்டுகளுக்கும் மேலாக திரையுலகில் பயணித்து வரும் இவர் கிட்டத்தட்ட 15 ஆண்டுகளாக முன்னணி நடிகை அந்தஸ்தில் இருக்கிறார்.
பொன்னியின் செல்வன், லியோ ஆகிய படங்களை தொடர்ந்து விடாமுயற்சி, தக் லைஃப், ராம், விஸ்வம்பரா என பல படங்களை கைவசம் வைத்துள்ளார் திரிஷா. இதுமட்டுமின்றி விஜய்யின் GOAT திரைப்படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
சம்பளம்
கமல் ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் தக் லைஃப் திரைப்படத்திற்காக நடிகை திரிஷா ரூ. 12 கோடி வரை சம்பளம் வாங்கியுள்ளார் என கூறப்படுகிறது. ஆனால், திரையுலகில் திரிஷா வாங்கிய முதல் சம்பளம் எவ்வளவு என்று பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை.
திரிஷா முதன் முதலில் நடிகையாக தலைகாட்டிய திரைப்படம் ஜோடி. பிரஷாந்த் மற்றும் சிம்ரன் இருவரும் இணைந்து நடித்த இப்படத்தில் கதாநாயகியின் தோழிகளில் ஒருவராக திரிஷா நடித்திருப்பார்.

பாகிஸ்தானுக்கு புதிய அச்சுறுத்தல்... மிக ஆபத்தான R-37M ஏவுகணைகளை சொந்தமாக்கும் இந்தியா News Lankasri

ஆயுத ஏற்றுமதியில் சாதனை படைத்த நாடு - ஜேர்மனி, இந்தியா உட்பட பல நாடுகள் முக்கிய வாடிக்கையாளர்கள் News Lankasri
