நடிகை திரிஷாவிற்கு கோல்டன் விசா.. கௌரவத்தை வழங்கிய அரபு அமீரகம்

trisha golden visa
By Kathick Nov 03, 2021 12:15 PM GMT
Report

அமீரக அரசு கடந்த 2019ஆம் ஆண்டு விசா வழங்கும் நடைமுறைகளில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்தது.

இதன் ஒரு பகுதியாக அமீரகத்தில் வசிக்க விரும்பும் முக்கிய பிரபலங்கள் அமீரகத்தை சேர்ந்த நிறுவனம் அல்லது தனி நபர் ஆதரவு இல்லாமல் 5 அல்லது 10 ஆண்டுகளுக்கு வசிக்கும் வகையில் கோல்டன் விசா அறிமுகம் செய்யப்பட்டது.

ஏற்கனவே நடிகர்கள் ஷாருக்கான், மோகன்லால், மம்முட்டி, பிருத்விராஜ், துல்கர் சல்மான், தயாரிப்பாளர் போனி கபூர், உள்ளிட்ட பல பிரபலங்களுக்கு அமீரக அரசு, கோல்டன் விசா வழங்கியது.

அந்த வரிசையில் தற்போது நடிகை திரிஷாவிற்கும் கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ளது.

அந்த நிகழ்வின் வீடியோவை நடிகை திரிஷா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US