விஜய்க்கு அழுத்தம் கொடுத்து வாய்ப்பை பெற்றறாரா நடிகை திரிஷா.. வெளிவந்த ஷாக்கிங் தகவல்
தளபதி 67ல் திரிஷா
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கும் விஜய் தற்போது வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ள தளபதி 67 படத்தில் நடிக்கவுள்ளார்.
இப்படத்தில் 14 ஆண்டுகளுக்கு பின் விஜய்யுடன் இணைந்து திரிஷா நடிக்கப்போவதாக ஏறக்குறைய உறுதியான தகவல் வெளிவந்துள்ளது. கில்லி, திருப்பாச்சி, ஆதி, குருவி படங்களை தொடர்ந்து தளபதி 67ல் விஜய்யுடன் நடிக்கும் வாய்ப்பை திரிஷா பெற்றுள்ளார்.
விஜய்க்கு அழுத்தம் கொடுத்த நடிகை
இந்நிலையில், இந்த படத்தில் நடிக்கும் வாய்ப்பை விஜய்க்கு அழுத்தம் கொடுத்து பெற்றுள்ளாராம் திரிஷா. அப்போது தான் தனக்கு மீண்டும் முன்பு போல் மார்க்கெட் உயரும் என்று எண்ணி விஜய்யிடம் இந்த வாய்ப்பை கேட்டுள்ளாராம்.
இதனால் தான் தளபதி 67ல் நடிக்கும் வாய்ப்பை நடிகை திரிஷாவிற்கு விஜய் கொடுத்துள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இதில், விஜய்க்கு திரிஷா அழுத்தம் கொடுத்தது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. ஆனால், விஜய்யிடம் படத்தில் நடிக்க வாய்ப்பு கேட்டது உண்மை தான் என தெரிவிக்கின்றனர்.

சிந்துநதி நீர் நிறுத்தத்தால்.., பாகிஸ்தான் நடிகைக்கு தண்ணீர் போத்தல்களை அனுப்பிய இந்திய ரசிகர் News Lankasri
