லியோ ஹிட்.. சம்பளத்தை உயர்த்திய த்ரிஷா! எவ்வளவு தெரியுமா?
நடிகை த்ரிஷா விஜய் உடன் கில்லி, குருவி, திருப்பாச்சி உள்ளிட்ட படஙக்ளில் நடித்து இருக்கும் நிலையில் பல வருடங்கள் கழித்து லியோ படத்திலும் ஜோடி சேர்ந்திருந்தார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கிய அந்த படத்தில் விஜய் மனைவியாக த்ரிஷா நடித்திருந்தார். சமீபத்தில் இந்த படத்தின் வெற்றி விழா நடந்தது. அதிலும் த்ரிஷா கலந்துகொண்டிருந்தார்.
சம்பளம்
இந்நிலையில் த்ரிஷா லியோ படம் ஹிட் ஆன பிறகு அவரது சம்பளத்தை உயர்த்தி இருக்கிறார் என தகவல் வெளியாகி இருக்கிறது.
லியோ படத்திற்கு 4 கோடி வரை சம்பளமாக வாங்கிய அவர் தற்போது அதை 10 கோடியாக உயர்த்திவிட்டாராம். அடுத்து அஜித்தின் விடாமுயற்சி படத்தில் த்ரிஷா நடிப்பது குறிப்பிடத்தக்கது.
அதுமட்டுமின்றி கமலின் 234ம் படத்திலும் த்ரிஷா நடிக்க இருக்கிறார்.