வெளிநாட்டில் நடிகை த்ரிஷா.. யாருடன் சென்றிருக்கிறார் தெரியுமா?
நடிகை த்ரிஷா 41 வயதிலும் தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோயினாக வலம் வருகிறார். விஜய், அஜித் என டாப் ஹீரோக்களின் படங்களில் அவர் நடித்து வருகிறார்.
அவரை சுற்றி எப்போதும் பல்வேறு வதந்திகள் தொடர்ந்து வந்துகொண்டே தான் இருக்கிறது. அவரது திருமணம் பற்றியும் பல கிசுகிசுக்கள் அடிக்கடி வரும், அவற்றுக்கெல்லாம் தனது பாணியில் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறார் த்ரிஷா.
தவறான ஒருவரை திருமணம் செய்துவிட்டு அதன் பிறகு விவாகரத்து செய்வதில் எனக்கு விருப்பம் இல்லை, அதனால் தான் சரியான நபருக்காக காத்திருக்கிறேன் என அவரே தனது திருமணம் தள்ளிப்போவது பற்றி விளக்கம் கொடுத்துவருகிறார்.
வெளிநாடு ட்ரிப்
தற்போது த்ரிஷா வெளிநாட்டுக்கு ட்ரிப் சென்று இருக்கிறார். மொராக்கோ நாட்டில் அவர் இருக்கும் ஸ்டில்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன.
அவரது தோழிகள் உடன் தான் இந்த ட்ரிப் சென்று இருக்கிறார். ஏஜிஎஸ் நிறுவனத்தின் அர்ச்சனா கல்பாத்தியும் த்ரிஷா உடன் சென்றிருக்கிறார்.
அவரது ஸ்டில்கள் இதோ.





வில்லிவாக்கம் தொகுதியில் திமுக வேட்பாளர் கார்த்திக் மோகனை ஆதரித்து கமல்ஹாசன் பிரச்சாரம் IBC Tamilnadu
புடினுக்கு எதிரான ஆட்சிக்கவிழ்ப்பு அச்சம் தீவிரம்: ரஷ்யாவின் ஆளும் வர்க்கத்தினர் சதித்திட்டம் News Lankasri