சூர்யா 45 படத்தில் இணையும் முன்னணி நடிகை.. வெளிவந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு
சூர்யா 45
சூர்யா கங்குவா படத்தை தொடர்ந்து தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் அவரது 44 - வது படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்திற்கு பின் சூர்யா, ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் அவரது 45 - வது படத்தில் நடிக்கிறார்.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ளார். இந்நிலையில், சூர்யா 45 படம் குறித்து தற்போது ஒரு அதிரடி அறிவிப்பு வெளியாகி உள்ளது.
அதாவது, சூர்யா 45 படத்தில் நடிகை த்ரிஷா நடிக்கவுள்ளதாக சில தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருந்தது.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு
தற்போது, த்ரிஷா சூர்யா 45 படத்தில் இணைந்துள்ளார் என கூறி இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அந்த வகையில், ஆறு படத்திற்கு பின் பல வருடங்கள் கழித்து மீண்டும் சூர்யா மற்றும் த்ரிஷா இணையவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Adding grace, charm, and power to #Suriya45 – welcome aboard, @trishtrashers ! A cinematic treat awaits🌟@Suriya_offl @RJ_Balaji @dop_gkvishnu @SaiAbhyankkar @prabhu_sr pic.twitter.com/nhXSf1I7va
— DreamWarriorPictures (@DreamWarriorpic) December 13, 2024