அஜித் படத்தால் செம கடுப்பில் இருக்கும் திரிஷா.. நல்லா இருந்தாலும் பிரச்சனை, நல்லா இல்லனாலும் பிரச்சனை
நடிகை திரிஷா
திரிஷா தற்போது தனது இரண்டாவது இன்னிங்சில் கலக்கி வருகிறார். ஆம், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பெரிதும் பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்து வந்த இவருக்கு பொன்னியின் செல்வன் படத்திற்கு பின் தொடர்ந்து பல படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
அப்படி தான் விஜய்யின் லியோ படத்திலும் கதாநாயகியாக நடித்திருந்தார். இதை தொடர்ந்து அஜித்தின் விடாமுயற்சி, மேலும் தெலுங்கு, மலையாளம் என மற்ற மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
கடுப்பில் இருக்கும் திரிஷா
இப்படி பிசியாக பல திரைப்படங்களில் நடித்து வரும் திரிஷாவிற்கு விடாமுயற்சி படத்தினால் டென்சன் ஆகியிருக்கிறாராம். விடாமுயற்சி படப்பிடிப்பு தள்ளிக்கொண்டே போவதினால் மற்ற படங்களுக்கு கொடுத்த கால்ஷீட்டும் தள்ளி போகிறதாம்.
ஆனால் அந்த படக்குழுவினர்கள் கொடுத்த தேதியில் நீங்கள் வந்து நடிக்க வேண்டும் என கூறிவிட்டார்களாம். இதனால் என்னடா இது இப்படியொரு நிலைமை என்று திரிஷா தலைசுற்றி நிற்கிறாராம். ஒருவர் நல்லா இருந்தாலும் பிரச்சனை, நல்லா இல்லனாலும் பிரச்சனை.