த்ரிஷா
மௌனம் பேசியதே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை த்ரிஷா. முதல் படமே வெற்றியை இவருக்கு தேடி தந்தது.
இதை தொடர்ந்து சாமி, லேசா லேசா, கில்லி, திருப்பாச்சி, மங்காத்தா என பல சூப்பர்ஹிட் திரைப்படங்களை கொடுத்து முன்னணி நடிகையாக உயர்ந்தார்.
கடந்த சில ஆண்டுகளாக விஜய், அஜித்துடன் கூட்டணி அமைக்காமல் இருந்த த்ரிஷா லியோ, குட் பேட் அக்லி, விடாமுயற்சி ஆகிய படங்கள் மூலம் மீண்டும் அவர்களுடன் இணைந்து நடித்தார்.
42வது பிறந்தநாள்
தமிழ் சினிமாவில் 22 ஆண்டுகளாகியும் முன்னணி நடிகையாக மார்க்கெட்டை இழக்காமல் ஜொலித்து கொண்டிருக்கும் நடிகை த்ரிஷாவின் 42வது பிறந்தநாள் இன்று. திரையுலகினரும், ரசிகர்களுக்கும் வாழ்த்து மாலையை பொழிந்து வருகிறார்கள்.
இந்த நிலையில் 42 வயதை எட்டியுள்ள நடிகை த்ரிஷாவின் சொத்து மதிப்பு குறித்து விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, த்ரிஷாவின் சொத்து மதிப்பு ரூ. 130 கோடி என கூறப்படுகிறது. இவர் ஒரு திரைப்படத்தில் நடிக்க ரூ. 10 கோடி முதல் ரூ. 12 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறாராம்.
மேலும் த்ரிஷாவிற்கு சொந்தமாக சென்னை மற்றும் ஹைதராபாத்தில் வீடு உள்ளன. அந்த வீட்டின் மதிப்பு ரூ. 16 கோடி இருக்கும் என தகவல் தெரிவிக்கின்றனர். த்ரிஷாவின் சொத்து மதிப்பு குறித்து வெளிவந்துள்ள இந்த தகவல் அதிகாரப்பூர்வமானது அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.