நடிகை திரிஷாவுடன் இயக்குனருக்கு மகிழ் திருமேனிக்கு சண்டை.. விடாமுயற்சி படப்பிடிப்பில் நடந்த சம்பவம்
விடாமுயற்சி
தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குனர்களில் ஒருவர் மகிழ் திருமேனி. இவர் இயக்கத்தில் தற்போது விடாமுயற்சி திரைப்படம் உருவாகி வருகிறது.
அஜித் நடித்து வரும் இப்படத்தில் அவருடைய இணைந்து திரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து வருகிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது அசர்பைஜானில் நடைபெற்று வருகிறது.
திரிஷா - மகிழ் திருமேனி சண்டை
இந்த நிலையில், விடாமுயற்சி படப்பிடிப்பில் நடிகை திரிஷா மற்றும் இயக்குனர் மகிழ் திருமேனி இடையே சண்டை ஏற்பட்டுள்ளதாம். இதனால் படப்பிடிப்பில் இருந்து கோபத்துடன் வெளியேறினாராம் திரிஷா.
ஏற்கனவே நடிகர் அஜித்திற்கும் இயக்குனர் மகிழ் திருமேனிக்கும் மனஸ்தாபம் ஏற்பட்டது என கூறப்பட்டது. அதன்பின் அர்ஜுனுக்கும் மகிழ் திருமேனிக்கும் இடையே கூட உரசல் ஏற்பட்டது என தகவல் வெளிவந்தது.
இதை தொடர்ந்து தற்போது மகிழ் திருமேனிக்கும் திரிஷாவிற்கும் இடையே சண்டை வந்துள்ளது என பிரபல மூத்த பத்திரிகையாளர் பிஸ்மி கூறியுள்ளார். இது சினிஉலகத்தின் சொந்த கருத்து இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.