நயன்தாராவால் சூப்பர்ஹிட் படத்தை மிஸ் செய்த திரிஷா.. அப்படி என்ன நடந்தது
நயன்தாரா - திரிஷா
தமிழ் சினிமாவில் கடந்த 20 ஆண்டுகளாக முன்னணி நடிகைகள் லிஸ்டில் டாப்பில் இருப்பவர்கள் திரிஷா மற்றும் நயன்தாரா.
இவர்கள் இருவரும் இணைந்து இதுவரை எந்த ஒரு திரைப்படத்திலும் நடிக்கவில்லை. ஆனால், இருவரும் இணைந்து நடிக்கும் ஒரு வாய்ப்பு வந்துள்ளது.
ஆம், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த திரைப்படம் காத்துவாக்குல ரெண்டு காதல். இப்படத்தில் முதன் முதலில் சமந்தா நடித்த கதாபாத்திரத்தில் நடிக்கவிருந்தது திரிஷா தானாம்.
தவறிப்போன வாய்ப்பு
ஆனால், நயன்தாராவால் இந்த வாய்ப்பு திரிஷாவின் கைநழுவி போயுள்ளது. ஏனென்றால், படத்தின் துவக்கத்தில் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா என்று தான் விக்னேஷ் சிவன் போடுவார்.
ஆனால் திரிஷா, அப்படி லேடி சூப்பர் ஸ்டார் என்று நயன்தாராவிற்கு போட்டால் ரசிகர்கள் மத்தியில் தன்னுடைய மதிப்பை குறைக்கும் என எண்ணி, லேடி சூப்பர் ஸ்டார் என்று நயன்தாராவிற்கு போடாமல் இருந்தால், நான் இப்படத்தில் நடிக்கிறேன் என்று கூறியுள்ளாராம்.
இதனால் தான் திரிஷாவிற்கு பதில் சமந்தாவை இந்த கதாபாத்திரத்தில் நடிக்க வைத்துள்ளார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.
பிரபல முன்னணி நடிகருடன் விஜய் மகன் சஞ்சய் எடுத்துக்கொண்ட புகைப்படம்.. யார் அந்த நடிகர் தெரியுமா

Brain Teaser Maths: இடது மூளை ஆற்றல் கொண்டவரால் மட்டுமே புதிரை தீர்க்க முடியும் உங்களால் முடியுமா? Manithan
