சினிமாவை விட்டு விலகுகிறாரா த்ரிஷா?.. அவர் அம்மா கொடுத்த அதிரடி விளக்கம்
த்ரிஷா
தமிழ் சினிமா மட்டுமின்றி தென்னிந்திய அளவில் பிஸியான நடிகையாக வலம் வருகிறார் த்ரிஷா. 22 ஆண்டுகளை சினிமாவில் கடந்துள்ள இவர், இன்றும் மார்க்கெட்டில் இளம் நடிகைகளுக்கு போட்டியாக முன்னணியில் இருக்கிறார்.
அஜித், விஜய் என முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து வரும் த்ரிஷா தற்போது ஒரு படத்தில் நடிக்க ரூ. 12 கோடி வரை சம்பளமாக கேட்கின்றார் என கூறப்படுகிறது.
தற்போது, இவர் அஜித் ஜோடியாக விடாமுயற்சி படத்தில் நடித்துள்ளார். இப்படம் அடுத்த மாதம் 6 - ம் தேதி வெளியாக உள்ளது.
அதிரடி விளக்கம்
இந்நிலையில், சில நாட்களாக த்ரிஷா சினிமாவை விட்டு விலகி அரசியலில் என்ட்ரி கொடுக்க உள்ளதாக தகவல் தொடர்ந்து இணையத்தில் உலா வந்த வண்ணம் இருந்தது.
தற்போது, இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் த்ரிஷாவின் அம்மா விளக்கம் கொடுத்துள்ளார். அதில், " த்ரிஷா அரசியலுக்கு எல்லாம் வரப்போவதில்லை. அவர் சினிமாவில் தொடர்ந்து நடிப்பார். இது தொடர்பாக இணையத்தில் பரவி வரும் தகவல் எதுவும் உண்மை இல்லை" என்று கூறியுள்ளார்.