விடாமுயற்சி படத்தில் த்ரிஷா வில்லியா?.. பிரபலம் உடைத்த ரகசியம்
த்ரிஷா
தமிழ் சினிமா மட்டுமின்றி தென்னிந்திய அளவில் பிஸியான நடிகையாக இருந்து வருகிறார் த்ரிஷா. 22 ஆண்டுகளை சினிமாவில் கடந்துள்ள இவர், இன்றும் மார்க்கெட்டில் முன்னணி இடத்தில் இருக்கிறார்.
விஜய், அஜித் போன்ற முன்னணி நட்சத்திரங்களுடன் ஜோடிபோட்டு நடித்து வரும் த்ரிஷா, தற்போது அஜித் ஜோடியாக விடமுயற்சி படத்தில் நடித்துள்ளார்.
பெரும் எதிர்பார்ப்புடன் உருவான இந்த படம் இன்று வெளியாகி உள்ளது. இந்நிலையில், இப்படம் குறித்து ஒரு மாஸ் அப்டேட் வெளிவந்துள்ளது.
அதாவது பிக் பாஸ் பிரபலமும் திரைப்பட ஆர்வலருமான அபிஷேக் ராஜா, விடாமுயற்சி திரைப்படத்தின் கிளைமாக்ஸ் குறித்து சில சுவாரசியமான விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
வில்லியா?
அதில், " விடமுயற்சி படத்தை மக்களுக்கு ஏற்ப படக்குழுவினர் சில மாற்றங்களை செய்திருக்கலாம். குறிப்பாக கிளைமாக்ஸ்-ல் த்ரிஷாவே கூட நெகட்டிவ் ரோலில் நடிக்க வைக்க வாய்ப்புள்ளது" என்று கூறியுள்ளார்.
தற்போது ரசிகர்கள் இந்த தகவலை கேட்டு இப்படத்தை டீ கோட் செய்து, ஒருவேளை இப்படி தான் கிளைமாக்ஸ் அமையப்போகிறதா? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.
You May Like This Video