கிடைத்த துணையை காப்பாற்றியவர் ஜென்டில்மேன்.. நடிகை த்ரிஷா போட்ட பதிவு வைரல்
நடிகை த்ரிஷா 42 வயதாகும் நிலையிலும் தமிழ் சினிமாவில் டாப் ஹீரோயின்களில் ஒருவராக இருக்கிறார். சமீபத்தில் அவர் நடிகர் விஜய் உடன் ஜோடியாக திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டது பெரிய சர்ச்சை ஆகி இருந்தது.
விஜய் மனைவி சங்கீதா அளித்த புகாருக்கு பிறகு அவர்கள் ஜோடியாக வந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

த்ரிஷா லேட்டஸ்ட் பதிவு
இந்நிலையில் நடிகை த்ரிஷா இன்ஸ்டாவில் போட்டிருக்கும் லேட்டஸ்ட் பதிவு வைரல் ஆகி இருக்கிறது. சமீபத்தில் இணையத்தில் வைரல் ஆன Punch குரங்கு பற்றி தான் அந்த பதிவு.
அம்மா உட்பட யாரும் அந்த குட்டி குரங்கை ஏற்றுக்கொள்ளாத நிலையில் ஒரு பொம்மையை அம்மா போல கட்டிப்பிடித்து எந்நேரமும் Punch தூக்கிக்கொண்டு சுற்றிய வீடியோ உலகம் முழுவதும் ஒரு மாதத்திற்கு முன் வைரல் ஆனது.
தற்போது பஞ்ச் குரங்குக்கு புது தோழி கிடைத்திருக்கும் நிலையில், அதை காப்பாற்ற மற்றொரு குரங்குடன் punch சண்டை போட்ட லேட்டஸ்ட் வீடியோவுக்கு தான் த்ரிஷா கமெண்ட் செய்து இருக்கிறார்.
"Now thatz a gentleman" என த்ரிஷா பதிவிட்டுள்ளார்.