நடிகை த்ரிஷா சமீபத்தில் விஜய் முதலமைச்சராக பதவியேற்கும் நிகழ்ச்சிக்கு சென்று இருந்தார். அங்கு அவர் மிக மிக மகிழ்ச்சியாக இருந்தார். விஜய் மேடையில் பேசுவதை கேட்டு த்ரிஷா கண்கலங்கி எமோஷ்னலாக இருந்த வீடியோவும் வைரல் ஆகி இருந்தது.
இந்நிலையில் த்ரிஷா நடிப்பில் இன்று கருப்பு படம் திரைக்கு வந்து இருக்கிறது. அந்த படத்தின் தயாரிப்பாளர் உடன் இருந்த பிரச்சனை காரணமாக த்ரிஷா ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளுக்கு செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வெட்கப்பட்ட த்ரிஷா
கருப்பு படத்தை தியேட்டரில் பார்க்க த்ரிஷா இன்று வந்திருந்தார். அவர் காரில் ஏறி கிளம்பும்போது ரசிகர் ஒருவர் "தளபதிய கேட்டதா சொல்லுங்க" என கூறினார்.
அதற்கு "கண்டிப்பா" என சொல்லிவிட்டு த்ரிஷா வெட்கப்பட்டு ரியாக்ஷன் கொடுத்தார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி உள்ளது.
"Thalapathy ah kettenu sollunga"
— Deepu (@deepu_drops) May 15, 2026
Trisha replies, "Kandipa" 😅❤️ pic.twitter.com/CLZUTP3QIn