குட் பேட் அக்லி படத்தில் டெலிட் செய்யப்பட்ட காட்சி.. நடிகை த்ரிஷா வெளியிட்ட வீடியோ
குட் பேட் அக்லி
இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவான திரைப்படம் குட் பேட் அக்லி. கடந்த 10ம் தேதி வெளிவந்த இப்படம் அஜித் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
உலகளவில் இரண்டு நாட்களில் ரூ. 90 கோடிக்கும் மேல் வசூலை அள்ளியுள்ளது. இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக த்ரிஷா நடித்திருந்தார். விடாமுயற்சி படத்தை தொடர்ந்து மீண்டும் இப்படத்தில் இவர்கள் இருவரும் இணைந்தனர்.
த்ரிஷா வெளியிட்ட வீடியோ
இந்த நிலையில், குட் பேட் அக்லி படத்தின் வெற்றியை தொடர்ந்து இப்படத்தின் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களையும், படத்தில் வாராத பாடல் காட்சி வீடியோ ஒன்றையும் த்ரிஷா பதிவிட்டுள்ளார்.
குட் பேட் அக்லி படத்திலிருந்து டெலிட் செய்யப்பட்ட இந்த காட்சி தற்போது த்ரிஷாவின் பதிவால் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ..
😗💣🔥⭐️🙏🏻🧿
— Trish (@trishtrashers) April 12, 2025
Nandri mammeyyyyy…. pic.twitter.com/AfKGepOOvr