ஓகே சொன்ன த்ரிஷா.. 10 வருடம் கழித்து செல்வராகவனுக்கு கொடுத்த பதில்
இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் 2007ல் வெளிவந்த தெலுங்கு படம் Aadavari Matalaku Arthale Verule. அதில் வெங்கடேஷ் மற்றும் த்ரிஷா ஆகியோர் நடித்து இருந்தனர்.
அந்த படம் தமிழில் 'யாரடி நீ மோகினி' என்ற பெயரில் ரீமேக் ஆனது. அதில் தனுஷ் மற்றும் நயன்தாரா இருவரும் நடித்து இருந்தனர்.
Aadavari Matalaku Arthale Verule படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க விரும்புவதாக செல்வராகவன் 2013ல் ட்விட்டரில் த்ரிஷாவிடம் கேட்டிருக்கிறார்.

10 வருடங்கள் கழித்து பதில்
செல்வராகவனுக்கு 10 வருடங்கள் கழித்து தற்போது ட்விட்டரில் பதில் கூறி இருக்கிறார் த்ரிஷா. நான் ரெடி என அவர் கூறி இருக்கிறார்.
ஏற்கனவே செல்வராகவன் பல sequel படங்களுக்கு தயாராகி வரும் நிலையில், அந்த லிஸ்டில் யாரடி நீ மோகினி படமும் இணைய வாய்ப்பு ஏற்பட்டு இருக்கிறது.
I’m ready @selvaraghavan ? https://t.co/9DCojSHe3u
— Trish (@trishtrashers) September 10, 2023