போன வேகத்தில் சென்னை திரும்பிய த்ரிஷா! லியோ ஷூட்டிங்கில் என்ன நடந்தது?
லியோ
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் தற்போது நடித்து வரும் படத்திற்கு லியோ என சில தினங்களுக்கு முன்பு தான் டைட்டில் அறிவித்தனர். வெளியான ப்ரோமோவில் விஜய் சாக்லேட் செய்யும் வேலை செய்கிறார். அதே நேரத்தில் அவர் கத்தியையும் செய்கிறார்.. அதனால் லியோ ரோல் எப்படி இருக்கும் என பெரிய எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்து இருக்கிறது.
ஷூட்டிங்கிற்காக கடந்த வாரம் மொத்த படக்குழுவும் தனிவிமானம் மூலமாக காஷ்மீருக்கு சென்றனர். அதன் வீடியோவும் வெளியாகி இருந்தது.
3 நாளில் திரும்பிய த்ரிஷா
விஜய் மற்றும் படக்குழு உடன் நடிகை த்ரிஷாவும் சென்று இருந்தார். ஆனால் அவர் காஷ்மீரில் இருந்து வெறும் மூன்றே நாளில் சென்னைக்கு திரும்பி வந்துவிட்டார்.
வழக்கமாக லோகேஷ் படங்களில் ஹீரோயின் ரோல்கள் இறந்துவிடுவது போல தான் காட்டப்படும். அதனால் 'இவ்ளோ சீக்கிரம் கொன்னுட்டாரா' என நெட்டிசன்கள் த்ரிஷா பற்றி மீம்கள் வெளியிட்டனர்.
மேலும் த்ரிஷா - லோகேஷ் கனகராஜ் இடையே பிரச்சனை வந்ததால் தான் அவர் கிளம்பி வந்துவிட்டார் என்றும் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் அது உண்மையாக இருக்க வாய்ப்பில்லை என்று சினிமா வட்டாரத்தினர் தெரிவித்து உள்ளனர்.
பிக் பாஸ் கொண்டாட்டம்.. வராமல் தவிர்த்த ஒரே ஒரு போட்டியாளர்! யார் பாருங்க