அதிகாலை முதல் இரவு வரை..பிரபல நடிகர் பற்றி த்ரிஷா கூறிய ரகசியம்.. என்ன தெரியுமா
நடிகை த்ரிஷா
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் த்ரிஷா. தனது சிறந்த நடிப்பை படங்களில் வெளிப்படுத்தி அதன்மூலம் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை சம்பாதித்தவர்.
தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் பல்வேறு வெற்றி படங்களை கொடுத்துள்ளார்.
இந்த நிலையில், ஒரு பேட்டியில் மகேஷ் பாபு பற்றி உங்கள் கருத்து என்ன என்று த்ரிஷாவிடம் கேள்வி கேட்கப்பட்டது.
த்ரிஷாவின் பதில்
அதற்கு பதிலளித்த த்ரிஷா, "மகேஷ் பாபு எனக்கு ஒரு நல்ல நண்பர் அவருடன் இணைந்து நான் அதடு மற்றும் சைனிகுடு போன்ற தெலுங்கு படங்களில் நடித்துள்ளேன் அவர் மிகவும் நல்ல மனிதர் தன்னுடன் பணியாற்றும் அனைவரிடமும் மரியாதையாக பழகுவார்.
மகேஷ் கடினமாக உழைக்கும் குணம் கொண்டவர். அதிகாலை முதல் இரவு வரை படப்பிடிப்பில் இருப்பார். கேரவனுக்கு கூட நடுவில் போகமாட்டார். அந்த அளவிற்கு கடினமாக உழைப்பார் அதனை பார்த்து எனக்கு குற்ற உணர்ச்சியாக இருக்கும்.
மேலும், யார் நடித்தாலும் அவர்கள் நடித்த ஒவ்வொரு காட்சியையும் மானிட்டர் முன் அமர்ந்து மகேஷ் கவனிப்பார்" என்று த்ரிஷா தெரிவித்துள்ளார்.

குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan
