த்ரிஷாவின் திருமணம் நின்றுபோனது ஏன்? காரணத்தை அவரே கூறியுள்ளார், இதோ பாருங்க
த்ரிஷா
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் த்ரிஷா. 42 வயதாகியும் கதாநாயகியாக ஜொலித்து கொண்டிருக்கும் த்ரிஷா, இந்த ஆண்டு குட் பேட் அக்லி, ஐடன்டிட்டி என சூப்பர்ஹிட் படங்களை கொடுத்துள்ளார். மேலும் தற்போது சூர்யாவுடன் இணைந்து சூர்யா 45வது படத்தில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் தான் தனது 42வது பிறந்தநாளை த்ரிஷா கொண்டாடினார். இந்த நிலையில், த்ரிஷாவின் திருமணம் குறித்து நல்ல செய்தி வராத என ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இப்படியிருக்க இதற்குமுன் நடக்கவிருந்த நிறுத்தப்பட்ட தனது திருமணம் குறித்து த்ரிஷா பேசிய விஷயம் வைரலாகி வருகிறது.
த்ரிஷாவின் திருமணம் நின்றுபோனது
நடிகை த்ரிஷாவிற்கு கடந்த 2015ம் ஆண்டு தயாரிப்பாளர் வருண் மணியனன் என்பவருடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. நிச்சயதார்த்த புகைப்படங்கள் கூட இணையத்தில் வைரலானது. ஆனால், திருமணம் நடக்கவில்லை. இந்த திருமணம் நடக்காது என த்ரிஷா கூறிவிட்டார். அதற்கான காரணத்தை பேட்டி ஒன்றில் த்ரிஷா தெரிவித்தார்.
அவர் கூறியதாவது "எனது திருமணத்தை நிறுத்திவிட்டேன். திருமணத்திற்கு பின் படங்களில் நடிக்க கூடாது என எனக்கு கணவராக வரவிருந்தவர் கூறினார். ஆனால், நான் நடிப்பை நிறுத்துவதற்கு பதில் திருமணத்தை நிறுத்திவிட்டேன். கர்ப்பமானால் மட்டுமே பிரேக் எடுப்பேன், அதுவும் சினிமாவில் இருந்து விலக மாட்டேன்" என கூறியுள்ளார்.
பல ஆண்டுகளுக்கு முன் பேட்டி ஒன்றில் த்ரிஷா கூறியது தான், தற்போது மீண்டும் ரசிகர்களிடையே பேசப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

வங்கக்கடலில் வலுப்பெற்ற காற்றழுத்த தாழ்வு பகுதி.., இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? News Lankasri

துருக்கியுடன் உறவுகளை இந்தியா துண்டித்தால்... இந்தப் பொருட்களின் விலை ராக்கெட் வேகத்தில் உயரும் News Lankasri

500 Invar ஏவுகணைகளை வாங்கும் இந்தியா - பாக்., சீனாவிற்கு பீதியை கிளப்பும் உள்ளூர் தயாரிப்பு News Lankasri

கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க கோரி கர்நாடகாவில் வெடித்த போராட்டம் - தக்லைஃப் நிகழ்வில் பேசியது என்ன? IBC Tamilnadu
