மூன்றாவது முறையாக சூர்யாவுடன் கைகோர்க்கும் டாப் நடிகை.. சூப்பர் ஜோடி
சூர்யா
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் சூர்யா. இவர் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் கங்குவா.
இப்படத்தை தொடர்ந்து சூர்யாவின் வெளிவரவிருக்கும் திரைப்படம் சூர்யா 44. கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வரும் இப்படத்தில், சூர்யாவுடன் இணைந்து பூஜா ஹெக்டே நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில், இறுதிக்கட்ட தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
சூர்யாவுடன் கைகோர்க்கும் நடிகை
ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருக்கும் திரைப்படம் சூர்யா 45. இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கிறார்கள். இந்த நிலையில், இப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக நடிக்கப்போவது யார் என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, சூர்யாவின் 45வது படத்தில் அவருக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கப்போவதாக கூறப்படுகிறது. த்ரிஷா - சூர்யா இருவரும் இணைந்து மௌனம் பேசியதே மற்றும் ஆறு படங்களில் நடித்துள்ளனர். மேலும் மன்மதன் அம்பு படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு த்ரிஷாவுடன் சூர்யா நடனமாடி இருந்தார்.
மேலும் ஆர்.ஜே. பாலாஜி இயக்கவுள்ள மாசாணி அம்மன் படத்திலும் த்ரிஷா தான் நடிக்கவிருந்தார் என தகவல் வெளிவந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அழுகும் உடல்கள்... சீரழிக்கப்பட்ட பெண்கள்: புலம்பெயர்ந்தோர் மீது மத்திய கிழக்கு நாடொன்றின் கொடூர முகம் News Lankasri
