சூர்யா படத்தில் த்ரிஷா இப்படியொரு கதாபாத்திரத்தில் நடிக்கிறாரா.. லேட்டஸ்ட் அப்டேட்
த்ரிஷா
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் த்ரிஷா. இவர் நடிப்பில் தற்போது விடாமுயற்சி, குட் பேட் அக்லி, தக் லைஃப் ஆகிய படங்கள் உருவாகி வருகிறது.
இதில் விடாமுயற்சி படத்தின் டீசர் சமீபத்தில் வெளிவந்த நல்ல வரவேற்பை பெற்றது. 20 ஆண்டுகளுக்கும் மேல் தமிழ் சினிமாவில் பயணித்த கொண்டிருக்கும் த்ரிஷா, அதிக சம்பளம் வாங்கும் நட்சத்திரங்களில் ஒருவராக இருக்கிறார்.
சூர்யா 45
இவர் தற்போது ஒரு படத்தில் நடிக்க ரூ. 10 கோடி முதல் ரூ. 12 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறார் என சொல்லப்படுகிறது. இவர் தற்போது புதிதாக கமிட் செய்திருக்கும் திரைப்படம் சூர்யா 45. பல ஆண்டுகளுக்கு பின் சூர்யாவுடன் இணைந்து இப்படத்தில் நடிக்கிறார்.
ஆனால், இதுகுறித்து அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளிவரவில்லை. ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கி, விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கவுள்ள த்ரிஷா, கதாபாத்திரம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, இப்படத்தில் வக்கீல் கதாபாத்திரத்தில் தான் த்ரிஷா நடிக்கவுள்ளாராம். இதனால் இதுவரை எந்த ஒரு படத்திலும் பார்த்திராத ஒரு கோணத்தில் த்ரிஷாவின் சூர்யா 45 படத்தில் பார்க்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு பொள்ளாச்சியில் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.