அருவருப்பா இருக்கு.. சட்டப்படி கடும் நடவடிக்கை! கூவத்தூர் சர்ச்சைக்கு த்ரிஷா அதிரடி ட்வீட்

By Parthiban.A Feb 20, 2024 12:29 PM GMT
Report

நடிகை திரிஷா பற்றி சில மாதங்களுக்கு முன்பு நடிகர் மன்சூர் அலி கான் சர்ச்சையாக பேசி இருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. அதற்கு திரிஷா கடும் கோபமாக பதிலடி கொடுத்த நிலையில் அவர் மன்னிப்பு கேட்டார். அதனால் மன்சூர் மீது சட்ட நடவடிக்கை எதுவும் திரிஷா எடுக்கவில்லை.

இந்நிலையில் நேற்று அதிமுக கட்சியின் முன்னாள் ஒன்றிய செயலாளர் ஏ.வி.ராஜு அளித்த பேட்டியில் த்ரிஷா பற்றி மோசமாக பேசி இருந்தார்.

ஒரு எம்எல்ஏ த்ரிஷா தான் வேண்டும் என அடம்பிடித்ததாகவும், அதற்கு 25 லட்சம் தரப்பட்டதாகவும் அந்த நபர் பேட்டி கொடுத்திருக்கிறார்.

அருவருப்பா இருக்கு.. சட்டப்படி கடும் நடவடிக்கை! கூவத்தூர் சர்ச்சைக்கு த்ரிஷா அதிரடி ட்வீட் | Trisha To Take Legal Action Koovathur Controversy

கூவத்தூர் சர்ச்சை.. முன்னணி நடிகை தவறான தொழில் செய்வதாக அவதூறு! - கொந்தளித்த சேரன்

கூவத்தூர் சர்ச்சை.. முன்னணி நடிகை தவறான தொழில் செய்வதாக அவதூறு! - கொந்தளித்த சேரன்

சட்ட நடவடிக்கை

திரிஷா பற்றி அவதூறாக பேசிய நபருக்கு சினிமா துறையினர் பலரும் கண்டனம் தெரிவித்து இருக்கின்றனர்.

இந்நிலையில் தான் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்போவதாக திரிஷா ட்விட்டரில் கோபமாக பதிவிட்டு இருக்கிறார்.

"பிரபலம் ஆக வேண்டும் என எந்த அளவுக்கும் கீழே இறங்குபவர்களை பார்க்க அருவருப்பாக இருக்கிறது. நிச்சயம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இனி சொல்ல வேண்டியது அனைத்தையும் என் legal department-யிடம் இருந்து வரும்" என த்ரிஷா கூறி இருக்கிறார். 

You May Like This Video


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US