அந்த நடிகருடன் இணைந்து நடிக்க ஆசை.. நடிகை த்ரிஷா உடைத்த ரகசியம்
த்ரிஷா
தென்னிந்திய சினிமாவில் 42 வயதிலும் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகை த்ரிஷா. அதிக சம்பளம் வாங்கும் தென்னிந்திய நடிகைகளில் ஒருவராக இருக்கும் இவர் தற்போது மணிரத்னம் இயக்கத்தில் ‘தக் லைஃப்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.
வரும் ஜூன் 5 - ம் தேதி வெளிவர உள்ள இப்படத்தில் கமல், சிம்பு, த்ரிஷா, அபிராமி உள்ளிட்ட ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்.
இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு உள்ள நிலையில், இப்படத்தின் முதல் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதை தொடர்ந்து, திரிஷா நடனத்தில் 'சுகர் பேபி' என்ற 2-வது பாடல் மற்றும் படத்தின் டிரைலர் சில தினங்களுக்கு முன் வெளியானது.

உடைத்த ரகசியம்
இந்நிலையில், த்ரிஷாவிடம் எந்த நடிகருடன் நடிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது என்று கேள்வி வர அதற்கு த்ரிஷா அளித்த பதில் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதில், " சந்தேகமே வேண்டாம். எனக்கு பகத் பாசிலுடன் இணைந்து நடிக்க வேண்டும் என்பதுதான் ஆசை. அவர் எந்த மாதிரியான கதைகள் நடித்தாலும் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்துவார்" என்று தெரிவித்துள்ளார்.

மேக் 5 வேகத்தில் வடிவத்தை மாறும் ஹைப்பர்சோனிக் ஏவுகணை - சாத்தியமற்றதை சாத்தியமாக்கும் சீனா News Lankasri
திசைதிருப்பு முன்னேற்றக் கழகத்தின் 𝐒𝐈𝐑 எதிர்ப்புக் கூட்டம் - நயினார் நாகேந்திரன் விமர்சனம் IBC Tamilnadu