தனுஷின் ஆடுகளம் படத்தில் முதன் முதலில் கதாநாயகியாக நடிக்கவிருந்தது இவர் தான்.. டாப்ஸி கிடையாது
ஆடுகளம்
வெற்றிமாறன் - தனுஷ் கூட்டணியில் இதுவரை நான்கு சூப்பர்ஹிட் திரைப்படங்கள் வெளிவந்துள்ளது. அதில் ஒன்று தான் ஆடுகளம். இப்படத்திற்காக தனுஷிற்கு தேசிய விருது கிடைத்தது.
மாபெரும் அளவில் வெற்றியடைந்த இப்படத்தில் கதாநாயகியாக பிரபல நடிகை டாப்ஸி நடித்திருந்தார். இதுவே இவருக்கு தமிழில் அறிமுக படமாகும்.
முதலில் நடிக்கவிருந்த நாயகி
ஆனால், முதன் முதலில் கதாநாயகியாக இப்படத்தில் நடிக்கவிருந்தது நடிகை டாப்ஸி கிடையாது. ஆம், முன்னணி நடிகை திரிஷா தான் இப்படத்தில் கதாநாயகியாக நடிக்க கமிட்டாகியுள்ளார்.
அவரை வைத்து சில காட்சிகளும் படமாக்கப்பட்டுள்ளது. அந்த காட்சிகளின் புகைப்படங்கள் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
ஆடுகளம் படத்தில் தனுஷ் - திரிஷா இணைந்து நடிக்காமல் போன நிலையில், கொடி திரைப்படத்தில் இருவரும் இணைந்து நடித்திருந்தார். இதுவே அவர்கள் இருவரும் இணைந்து நடித்த முதல் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.





ஹெலிகொப்டரிலிருந்து கொட்டிய பணம்: இறுதிச்சடங்கில் பங்கேற்றவர்களுக்கு கிடைத்த இன்ப அதிர்ச்சி News Lankasri
