நாய்களுக்கு பாதிப்பு.. வருத்தத்தில் த்ரிஷா! பதிவை ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள்
முன்னணி நடிகையான த்ரிஷா லியோ படத்திற்கு பிறகு அடுத்த அஜித்தின் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் நடிகர் மன்சூர் அலி கான் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்து இருந்த்தும், அதை தொடர்ந்து அவருக்கு பல பிரபலங்கள் ஆதரவு தெரிவித்து இருந்ததும் சினிமா துறையில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
தற்போது சென்னை வெள்ளத்தில் சிக்கி நாய்கள் பாதிக்கப்பட்டு இருப்பதாக இன்ஸ்டாவில் த்ரிஷா பதிவிட்டு இருக்கிறார்.

ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள்
"Recent cyclone wreaked havoc at our sanctuary" என குறிப்பிட்டு த்ரிஷா ஒரு வீடியோவை ஷேர் செய்திருக்கிறார். ப்ளூ க்ராஸ் வீடியோவை தான் த்ரிஷா பகிர்ந்து இருக்கிறார். செல்ல பிராணிகளுக்காக donation செய்யும்படியும் அந்த வீடியோவில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
அதை நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். மக்கள் பாதிக்கப்பட்டது பற்றி த்ரிஷா ஒரு பதிவு கூட போடவிலை என்பதை குறிப்பிட்டு விமர்சித்து வருகின்றனர்.

