Tron: Ares திரை விமர்சனம்
ஹாலிவுட் திரையுலகில் இந்த ட்ரான் படத்திற்கு என பெரிய ரசிகர்கள் வட்டம் உள்ளது. அந்த வகையில் தற்போது Joachim Ronning இயக்கத்தில் Jared Leto நடிப்பிப் வெளிவந்துள்ள இந்த Tron: Ares எப்படியுள்ளது பார்ப்போம்.
கதைக்களம்
டெலிஞ்சர் என்பவர் தனக்கான ஒரு மிகப்பெரிய டிஜிட்டல் உலகத்தை உருவாக்கியுள்ளார். அதில் Ares என்ற ஒரு மனிதனை உருவாக்கி அவரை நிஜ உலகத்திற்கு கொண்டு வந்து ஆர்மி-க்கு கொடுக்க முயற்சிக்கிறார்.
ஆனால், அந்த Ares-ஆல் நிஜ உலகில் 29 நிமிடம் மட்டுமே இருக்க முடியும், அதன் பிறகு கரைந்து போய் விடும், அதே நேரத்தில் டெலிஞ்சர் போட்டி கம்பெனியான என்காம் நிறுவத்தை சார்த்த ஈவ் டிஜிட்டல் உலகில் இருப்பதை நிஜ உலகில் நிரந்தரமாக கொண்டு வரும் கோட்-யை கண்டுபிடிக்கிறார்.
இதை டெலிஞ்சர் எப்படியோ அறிந்துகொண்டு என்காம் சர்வரை ஹாக் செய்து, ஈவ்-யை Ares உதவியுடன் கடத்துகிறார்.
ஆனால், Ares க்கு கொஞ்சம் கொஞ்சமாக மனித உணர்வுகள் வர, தன் முதலாளி டெலிஞ்சர் நம்மை அழிவுக்கு பயன்படுத்துகிறான், ஈவ் நம்மை வாழ வைப்பாள் என ஈவ் பக்கம் நிற்க, அதன் பின்ன என்ன ஆனது என்பதே மீதிக்கதை.
படத்தை பற்றிய அலசல்
ஒரு டிஜிட்டல் உலகிற்கும், மனிதர்களுக்குமிடையேயான போராட்டத்தை இயக்குனர் எல்லோருக்கும் புரியும் படி பிரமாண்டத்துடன் எடுத்துள்ளார். அதிலும் Ares, ஈவ் சிஸ்டத்திற்குள் சென்று அவளின் எமோஷ்னலால் மனித உணர்வுகளை அறிவது எல்லாம் கற்பனைக்கு எட்டாத விஷயத்தை படம்பிடித்துள்ளனர்.
அதிலும் ஈவ் சிஸ்டத்தை ஹாக் செய்யும் இடம், அதை எதோ போர் போல் 5 ப்ரோகிராம் மனிதர்கள் சாப்ட்வேர் உள்ள வருவது, அதை எதிர்க்க வரும் ஆண்டி வைரஸ் மனிதர்கள் என கற்பனை குதிரையை பறக்க விட்டுள்ளார் இயக்குனர்.
ஈவ், Ares நீ என்னை காப்பாற்றினால், நான் உன்னை நிஜ உலகிற்கு நிரந்தரமாக கொண்டு வருகிறேன் போன்ற அக்ரீமெண்ட் படத்தின் மையக்கதை.
இவை முடிந்த அளவிற்கு சுவாரஸ்யமாகவும், பிரமாண்டமாக கொண்டு சென்றாலும், எமோஷ்னல் ஆக எந்த ஒரு காட்சியும் கனேக்ட் ஆக முடியவில்லை என்பது படத்தின் மிகப்பெரும் பலவீனம்.
அதோடு படத்தில் வரும் ஏகப்பட்ட டெக்னிக்கல் டேர்ம் வார்த்தைகள் ஒரு கட்டத்திற்கு மேல் போதும்ப்பா, என்ற குழப்பத்தை ஏற்படுத்துகிறது.
மற்றப்படி டெக்னிக்கலாக படம் டாப் நாட்ச், அதிலும் ஈவ் சிஸ்டத்தை ஹாக் செய்யுமிடம், ஈவ்-யை பிடிக்க Ares துரத்தும் காட்சி, கிளைமேக்ஸ் சண்டைக்காட்சி என அனைத்தும் விஸ்வல் ட்ரீட், அதை விட பின்னணி இசை அபாரம்.
க்ளாப்ஸ்
படத்தின் கதைக்களம்
டெக்னிக்கல் விஷயங்கள், குறிப்பாக VFX.
பல்ப்ஸ்
கொஞ்சம் கூட கனேக்ட் ஆகாத எமோஷ்னல் காட்சிகள்.
மொத்தத்தில் இந்த Tron:Ares ஒரு ப்ரோகிராமிற்கு வந்த உணர்வு, ஆடியன்ஸுக்கும் கடத்தும்படி காட்சிகள் அமைத்திருந்தால் பெரியளவில் கவர்ந்திருக்கும்.