டிரம்ப் வைத்த செக்.. தமிழ் படங்களின் வசூலுக்கு வந்த பெரிய ஆபத்து
தமிழ் படங்கள் தமிழ்நாட்டில் வசூல் ஈட்டும் அளவுக்கு வெளிநாடுகளிலும் நல்ல வசூலை பெற்று வருகின்றன. அமெரிக்கா உட்பட தமிழர்கள் வாழும் பல நாடுகளில் முன்னணி தமிழ் நடிகர்களின் படங்கள் ரிலீஸ் ஆகின்றன.
குறிப்பாக அமெரிக்கா தான் முக்கிய மார்க்கெட் ஆக இருந்து வருகிறது.
வரி
இந்நிலையில் தற்போது அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளியிட்ட அறிவிப்பு தமிழ், தெலுங்கு உட்பட இந்திய சினிமா துறையினருக்கு அதிர்ச்சி கொடுத்து இருக்கிறது.
வெளிநாட்டு திரைப்படங்களை அமெரிக்காவில் ரிலீஸ் செய்தால் 100% சுங்க வரி என அறிவிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் அமெரிக்க படங்கள் வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்டால் அதற்கும் 100% வரி என டிரம்ப் அறிவித்து இருக்கிறார்.
இதனால் தமிழ், தெலுங்கு படங்களின் வசூல் அங்கு பெரிய அளவில் பாதிப்பை சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.