ஜெயிலர் 2 படத்தில் தனுஷ் நடிக்கிறாரா? உண்மை இதுதான்
ஜெயிலர்
இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து கடந்த ஆண்டு வெளிவந்த திரைப்படம் ஜெயிலர். இப்படம் மாபெரும் அளவில் வெற்றியடைந்தது. மேலும் தமிழ் சினிமாவின் இண்டஸ்ட்ரி ஹிட் படமாகவும் மாறியது.
இன்று வரை இப்படத்தின் வசூல் சாதனையை வேறு எந்த படமும் முறியடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஜெயிலர் படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து ஜெயிலர் 2 எடுக்க படக்குழு திட்டமிட்டு வருவதாக தகவல் தெரிவித்தனர்.
அதற்கான பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும், கூலி படத்தை முடித்துவிட்டு ஜெயிலர் 2 படத்தில் ரஜினிகாந்த் நடிப்பார் என்றும் திரை வட்டாரத்தில் தகவல்கள் உலா வந்தன.
ஜெயிலர் 2 படத்தில் தனுஷ் நடிக்கிறாரா
இந்த நிலையில், சமீபத்தில் ஜெயிலர் 2 படத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து தனுஷ் நடிக்கப்போவதாக இணையத்தில் ஒரு தகவல் வைரலாகி வந்தது. ஆனால், இது உண்மையான தகவல் இல்லை, வெறும் வதந்தி தான் என தெரியவந்துள்ளது.
ஜெயிலர் 2 படம் தற்போது வரை பேச்சு வார்த்தையில் மட்டுமே இருக்கிறது என்றும், அந்த படத்தில் தனுஷ் நடிக்கவில்லை என்றும் பத்திரிகையாளர்கள் அந்தணன் மற்றும் பிஸ்மி இருவரும் தெரிவித்துள்ளனர். இதன்மூலம் இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

நடிகை விஜயலட்சுமிக்கு 7 முறை கருக்கலைப்பு; பணம் பெற்ற சீமான் - வெளியான நீதிமன்றம் தீர்ப்பு IBC Tamilnadu
