ரசிகருக்கு அஜித் எழுதிய கடிதம்.. தேதி தவறாக இருந்ததால் வந்த ட்ரோல்! ஆனால் உண்மை இதுதான்
நடிகர் அஜித் கோலிவுட்டில் உச்ச நடிகர்களில் ஒருவர். தற்போது ஹெச்.வினோத் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இது அஜித் - ஹெச்.வினோத் கூட்டணியில் உருவாகும் மூன்றாவது படமாகும்.
மேலும் அஜித் சமீபத்தில் இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகளில் பைக் ரைடு சென்றபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் சமீபத்தில் அதிகம் வைரல் ஆனது.
இந்நிலையில் தற்போது அஜித் ரசிகர் ஒருவரின் பிறந்தநாளுக்கு அஜித் வாழ்த்து சொல்லும் ஆடியோ ட்விட்டரில் அதிகம் வைரலாகி வருகிறது. மேலும் லவன் என்ற ரசிகருக்கு வாழ்த்து சொல்லி அஜித் எழுதிய கடிதமும் வைரல் ஆகி இருக்கிறது.
Thala Ajith surprise wishing fan on phone call and letter 🤯 #Ajith #Thala #AK61 pic.twitter.com/UclA2z33vj
— Xavier Michael (@Xavier__Michael) June 29, 2022
இந்நிலையில் அஜித் அந்த கடிதத்தில் 10.10.22 என தேதியை குறிப்பிட்டு இருக்கிறார். அதை பார்த்து சிலர் அஜித்தை விமர்சித்து வருகின்றனர்.
ஆனால் உண்மையில் ரசிகரின் பிறந்தநாளான அந்த தேதியை கடிதத்தில் முன்தேதியிட்டு தான் அஜித் எழுதி இருக்கிறார் என்கிற தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. அதனால் ரசிகர் கேட்டுக்கொண்டதால் தான் அஜித் அந்த தேதியை குறிப்பிட்டு இருக்கிறார் என்கிற உண்மை வெளிவந்திருக்கிறது.