TURBO: திரை விமர்சனம்

By Tony May 24, 2024 04:00 AM GMT
Report

மம்முட்டி நடிப்பில் வைஸாக் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் 'TURBO' மலையாளப் படத்தின் விமர்சனம் குறித்து இங்கே காண்போம்.

TURBO: திரை விமர்சனம் | Turbo Movie Review

கதைக்களம்

கேரளாவில் அடிதடி சண்டை என கோபக்கார நபராக அம்மாவுடன் வசித்து வருபவர் ஜோஷ் (மம்முட்டி). சண்டை என்று வந்துவிட்டால் இறங்கி அடிக்கும் ஜோஷ், தனது அம்மாவுக்கு மட்டும் பயந்த பிள்ளையாக இருக்கிறார்.

நண்பர் ஜெர்ரியின் காதலை சேர்த்து வைப்பதாக நினைத்து இந்துலேகாவை கடத்தி வரும் ஜோஷ், ஒரு கட்டத்தில் அவருடனே சென்னைக்கு செல்லும் சூழல் உருவாகிறது.

TURBO: திரை விமர்சனம் | Turbo Movie Review

மறுபுறம் சென்னையில் செல்வாக்கான நபராக வலம் வரும் வெற்றிவேல் ஷண்முக சுந்தரம் (ராஜ் பி.ஷெட்டி), MLAக்களை விலைக்கு தனது ஆதரவு கட்சி ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று முயற்சிக்கிறார்.

அதற்காக அவர் செய்யும் மோசடியை ஜெர்ரி கண்டுபிடிக்க, அவருக்காக வெற்றிவேலுடன் ஜோஷ் மோதும் சூழல் உருவாகிறது. இறுதியில் ஜோஷ் எப்படி அவரை வீழ்த்தினார் என்பதே மீதிக்கதை.

படம் பற்றிய அலசல்

போக்கிரிராஜா, புலிமுருகன் படங்களை இயக்கிய வைஸாக் தான் TURBO படத்தையும் இயக்கியுள்ளார். முழுக்க முழுக்க கமர்ஷியல் படமாகவே உருவாகியுள்ள இப்படத்தில் சண்டைக்காட்சிகளுக்கு குறைவில்லை.

மம்முட்டிக்கு 72 வயது என்று அவரே சொன்னதால் நமக்கு தெரியும் போல. அந்த அளவுக்கு துடிப்புடன் டர்போ ஜோஷ் எனும் கதாபாத்திரத்தில் அதகளம் செய்திருக்கிறார். ஜெர்ரியாக வரும் சபரீஷ் வர்மா, அஞ்சனா ஜெயபிரகாஷை காதலிக்கிறார்.

TURBO: திரை விமர்சனம் | Turbo Movie Review

PT Sir - திரைவிமர்சனம்

PT Sir - திரைவிமர்சனம்

ஆனால் அவர்கள் காதலில் உள்ளம் அழுத்தம் குறித்த காட்சிகள் இல்லை. தெலுங்கு நடிகர் சுனிலை காமெடிக்கு பயன்படுத்தியிருக்கிறார்கள். எனினும் அதனை அவர் சிறப்பாக செய்திருக்கிறார். வில்லனாக வரும் ராஜ் பி.ஷெட்டி (வெற்றிவேல்) தனது வாய்ஸ் மற்றும் பாடிலேங்குவெஜால் மிரட்ட முயற்சிக்கிறார்.

தமிழ்நாட்டில் நடந்த அரசியல் சூழலை கதை பின்னணியாக வைத்துள்ளனர். கமர்ஷியல் படம் என்பதால் லாஜிக்குக்கு இடமில்லை. எனினும் மம்முட்டிக்கு நடிப்பதற்கு காட்சிகள் இல்லாமல் சண்டைக்காட்சிகளில் மட்டும் நொறுக்கியுள்ளார்.

TURBO: திரை விமர்சனம் | Turbo Movie Review

ஆரம்பம் முதல் இறுதி வரை படத்தை விறுவிறுப்பாக கொண்டு செல்வதில் ஜெயித்திருக்கிறார் இயக்குநர் வைஸாக். கிளைமேக்சில் இரண்டாம் பக்கத்திற்கு லீட் கொடுக்கும் வகையில் வரும் தமிழ் நடிகரின் வாய்ஸ் ஆச்சரியம்.  

க்ளாப்ஸ்

மம்முட்டி அதகளம் செய்யும் ஆக்ஷன் காட்சிகள்

விறுவிறுப்பான திரைக்கதை

ஒளிப்பதிவு, இசை

மைனஸ்

வழக்கமான கதை

யூகிக்கக்கூடிய காட்சிகள்

மொத்தத்தில் மம்முட்டியின் ஆக்ஷனை பார்த்து ரசிக்க வேண்டும் என்பவர்களுக்கு ட்ரீட் தான் இந்த TURBO. மற்றவர்களுக்கு ஒருமுறை பார்க்கலாம் என்ற கமர்ஷியல் படம் தான்.

TURBO: திரை விமர்சனம் | Turbo Movie Review

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US