சென்னையில் பெரும் போராட்டம்! கொந்தளிக்கும் ரசிகர்கள்! டாப் ட்ரெண்டிங்! ரஜினியின் முடிவு என்ன?
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ரசிகர்கள் ஒட்டு மொத்தமாக திரண்டு சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என கோஷமிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். இதில் தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்து வருகை தந்துள்ள அவரின் ரசிகர்கள் பங்கேற்றுள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன் ரஜினி, அண்ணாத்த படப்பிடிப்புகளில் கலந்து கொண்ட போது படக்குழுவினர் சிலருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. இதனால் படப்பிடிப்புகளும் நிறுத்தி வைக்கப்பட்டன.
ரஜினியும் தன்னை பரிசோதனை செய்து கொண்டு கொரோனா தொற்று இல்லை என்பதை உறுதிப்படுத்திக்கொண்டார். அரசியலுக்கு வருவதை அவர் அறிவித்திருந்த நிலையில் உடல் நிலை காரணங்களால் தான் அரசியலுக்கு வரமுடியவில்லை என்னை மன்னியுங்கள் என கூறிவிட்டார்.
தற்போது ரஜினி ரசிகர்கள் போராட்டம் நடத்தி வருவதால் அவர் என்ன முடிவு என பொறுத்திருந்து பார்ப்போம்..
Bigg Boss 10: கோபத்தில் இருந்த விஜய் சேதுபதியை கூலாக மாற்றிய போட்டியாளர்... அப்படியென்ன நடந்தது தெரியுமா? Manithan
T20 போட்டியில் 188 ஓட்டங்கள் விளாசிய பிரிட்டோரியஸ்; கெயிலின் 13 வருட சாதனை முறியடிப்பு News Lankasri