முன்னாள் காதலர் கொடுத்த டார்ச்சர்.. பிரபல டிவி நடிகை தூக்கிட்டு தற்கொலை!
வைஷாலி டக்கர்
பிரபல டிவி நடிகை வைஷாலி டக்கர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது ஹிந்தி சின்னத்திரை ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கிறது.
Sasural Simar Ka, Super Sisters, Vish Ya Amrit: Sitara, Manmohini 2, Yeh Rishta Kya Kehlata Hai போன்ற தொடர்களில் அவர் நடித்து இருக்கிறார்.
இந்தூரில் உள்ள அவரது வீட்டில் நடிகை தற்கொலை செய்து கொண்ட நிலையில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
லெட்டர்
கடந்த ஏப்ரல் மாதத்தில் தான் வைஷாலிக்கு அபிநந்தன் என்ற டாக்டர் உடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. ஆனால் அதற்கு பின் திருமணத்தை வைஷாலி நிறுத்திவிட்டார். நிச்சயதார்த்த வீடியோவையும் இன்ஸ்டாகிராமில் இருந்து நீக்கிவிட்டார்.
கடந்த 5 நாட்களுக்கு முன்பு கூட வைஷாலி இன்ஸ்டாகிராமில் ஒரு funny ரீல்ஸ் வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். இந்நிலையில் தற்போது அவர் திடீரென தற்கொலை செய்தது ஏன் என ரசிகர்கள் அதிர்ச்சி ஆகி இருக்கிறார்கள்.
வைஷாலியின் அறையில் இருந்து ஒரு கடிதம் கிடைத்திருக்கிறது என்றும் அதை வைத்து தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது. வைஷாலியின் முன்னாள் காதலர் அவரை தொந்தரவு செய்துவந்தது தெரிந்திருப்பதாக போலீசார் கூறி இருக்கின்றனர்.
பிக்பாஸாக பின்னணியில் குரல் கொடுக்கும் நபருக்கு! ஒரு நாள் சம்பளம் மட்டும் எவ்வளவு தெரியுமா?