தமிழனை துரத்தி அடிக்கும் வட இந்தியர்கள், இப்படியே போனால் பிச்சை தான் எடுக்கணும்- மதுரை முத்து கோபமான பேச்சு

By Yathrika Jan 28, 2023 07:10 AM GMT
Report

மதுரை முத்து 

நடிகர்களை தாண்டி காமெடி செய்யும் பிரபலங்களை மக்கள் அதிகம் ஆதரிப்பார்கள். அப்படி விஜய் தொலைக்காட்சியில் நிறைய நிகழ்ச்சியில் தோன்றி மக்களை சிரிக்க வைத்து வருபவர் தான் மதுரை முத்து.

இவர் எப்போதும் மிகவும் காமெடியாக நிறைய விஷயங்களை மக்களிடம் பதிவு செய்வார், சில ரீச் ஆகியுள்ளன. அப்படி இப்போது ஒரு முக்கியமான விஷயம் குறித்து வீடியோவாக வெளியிட மக்களால் அதிகம் கவனிக்கப்பட்டு வருகிறது.

தமிழனை துரத்தி அடிக்கும் வட இந்தியர்கள், இப்படியே போனால் பிச்சை தான் எடுக்கணும்- மதுரை முத்து கோபமான பேச்சு | Tv Celeb Madurai Muthu Angry Speech Video

என்ன வீடியோ

ஒரு நாடு ஒரே ரேஷன், தமிழகத்திற்கு அதிகம் வருகை தந்தவட இந்தியர்கள் போன்ற விஷயங்கள் தமிழக மக்களை நிறைய பாதித்து வருகிறது. அந்த வகையில் திருப்பூரில் நடந்த ஒரு சம்பவம் குறித்து மதுரை முத்து பேசியுள்ளார்.

அதில் அவர், திருப்பூரில் சுமார் 100 பேர் கத்தி, பெல்ட், மரக்கட்டைகளை கொண்டு நம் தமிழக இளைஞர் ஒருவரை தாக்கும் வீடியோவை பார்த்தேன். தமிழகத்திற்கு வேலை கேட்டு வந்தவர்கள் முதலில் 10% தான் இருந்தார்கள். இப்போது திருப்பூரில் மட்டும் 65% பேர் வட மாநிலத்தவர் உள்ளனர்.

பால் அபிஷேகம் செய்யும் நமக்கு இப்போது அவர்கள் பால் ஊத்த போகிறார்கள், இப்படியே போனால் நாம் பிச்சை தான் எடுக்க வேண்டும், உஷாராக இருங்கள் என பேச அந்த வீடியோவை ரசிகர்கள் பலரும் ஷேர் செய்து வருகிறார்கள்.

தமிழ் சினிமாவின் டாப் நடிகர்களின் சொந்த ஊர் எது தெரியுமா?- இதோ லிஸ்ட் 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US