இரட்டை குழந்தைகள் பிறந்த பிறகு சாப்பாட்டிற்கே கஷ்டப்பட்டோம்- பிரபலங்கள் பிரஜன், சாண்ட்ரோ எமோஷ்னல்
பிரஜன்-சாண்ட்ரா
சின்னத்திரையில் ரீல் ஜோடியாக இருந்து நிஜ ஜோடியாக மாறியவர்கள் பலர் உள்ளார்.
சேத்தன்-தேவதர்ஷினி, ஸ்ரீகுமார்-ஷமிதா, சஞ்சீவ்-ப்ரீத்தி, போஸ் வெங்கட்-சோனியா, சஞ்சீவ்-ஆல்யா மானசா, மதன்-ரேஷ்மா, ஷபானா-ஆர்யன், சித்து-ஸ்ரேயா என இப்படி பல பிரபலங்களை சொல்லிக் கொண்டே போகலாம்.
அந்த லிஸ்டில் பிரஜின் மற்றும் சாண்ட்ராவும் உள்ளார்கள். இருவருமே சின்னத்திரையிலும் வெள்ளித்திரையிலும் நடித்துள்ளார்கள், ஆனால் பெரிய அளவில் பிரபலம் அடையவில்லை.
இவர்களுக்கு திருமணம் ஆகி 10 ஆண்டுகள் கழித்து தான் சான்ட்ரா கர்ப்பமாக இருந்தார், இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தார்கள்.

எமோஷ்னல் பேட்டி
அண்மையில் பிரஜின்-சாண்ட்ரா இருவரும் சேர்ந்து பேட்டி ஒன்று அளித்திருக்கிறார்கள். அதில் அவர், திருமணத்திற்கு பிறகு நாங்கள் இருவரும் மிகவும் கஷ்டப்பட்டோம், அதைப்பற்றி யாரிடமும் சொல்ல மாட்டோம்.
நாங்கள் காதலிக்கும் போது எங்களுக்கு நெருங்கிய நண்பர் ஒருவர் இருந்தார், அவர்தான் எங்களுக்கு ஒரு மூட்டை அரிசி எடுத்து தந்தார். குழந்தைகள் பிறந்த பிறகு மிகவும் கஷ்டப்பட்டு இருவரும் வளர்த்தோம்.
எங்களுக்கு யாருமே உதவி செய்யவில்லை, பிரஜின் நான் கஷ்டப்படுகிறேன் என இரவு முழுவதும் தூங்காமல் குழந்தைகளை பார்த்துக் கொள்வார்.
எங்கள் இரண்டு பேருக்கும் இடையில் நல்ல புரிதல் இருந்ததால் தான் எங்களுடைய கஷ்டமாக காலத்தை கடந்து வந்தோம் என கூறியிருக்கிறார்.

You May Like This Video
வடிவேலுக்கு வராத கூட்டமா விஜய்க்கு வந்துவிட்டது: திமுகவின் டி.கே.எஸ் இளங்கோவன் கருத்து IBC Tamilnadu
உக்ரைன் தலைநகர் மேல் வெடித்த ரஷ்ய ஏவுகணைகள்- விண்வெளியிலிருந்து பதிவுசெய்யப்பட்ட காட்சி News Lankasri