இது கூட தெரியாம இருக்கீங்க.. CAA-விற்கு எதிராக குரல் கொடுத்த விஜய்.. வெளுத்து வாங்கிய மக்கள்
விஜய்
நடிகர் விஜய் கடந்த மாதம் தன்னுடைய அரசியல் கட்சியை துவங்கினார். தமிழக வெற்றிக்கழகம் எனும் பெயரில் துவங்கப்பட்டுள்ள இக்கட்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
சமீபத்தில் தான், தமிழக வெற்றிக்கழகம் கட்சியில் சேர செயலி ஒன்றை அறிமுகம் செய்தனர். இந்த செயலி அறிமுகம் செய்யப்பட்ட 3 நாட்களில் 50 லட்சம் உறுப்பினர்கள் கட்சியில் இணைந்துள்ளதாக தகவல் வெளிவந்தது.
எதிர் குரல்
அரசியல் கட்சியின் தலைவராக இருக்கும் விஜய் சமூகத்தில் நடக்கும் ஓவ்வொரு விஷயத்திற்கும் தொடர்ந்து தனது குரலை எழுப்பி வருகிறார். அந்த வகையில் தற்போது CAA சட்டத்திற்கு எதிராக தனது குரலை எழுப்பியுள்ளார்.
" சமூக நல்லிணக்கத்துடன் நாட்டு மக்கள் வாழும் சூழலில் பிளவுவாத அரசியலை முன்னிறுத்தி செயல்படுத்தப்படும் CAA போன்ற சட்டங்கள் ஏற்புடையது அல்ல. தமிழ்நாட்டில் குடியுரிமை சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என ஆட்சியாளர்கள் உறுதி அளிக்க வேண்டும்" என அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் த.வெ.க கட்சியின் தலைவர் விஜய்.
#CitizenshipAmendmentAct pic.twitter.com/4iO2VqQnv4
— TVK Vijay (@tvkvijayhq) March 11, 2024
இந்த சட்டத்திற்கு எதிராக தமிழகத்தை ஆண்டு கொண்டிருக்கும் தி.மு.க ஏற்கனவே தன்னுடைய எதிர்ப்பை தெரிவித்துவிட்டது. சட்டமன்றத்தில் தமிழகத்தில் CAA கிடையாது என்ற தீர்மானமும் எடுத்துவிட்டது.
ஆனால், விஜய் இப்போது வந்து இதை பற்றி பேசுகிறார். யாரவது அவருக்கு எடுத்து சொல்லுங்க என வெளுத்து வாங்கி வருகிறார்கள். இன்னும் சிலர் 'விஜய் அமைதியாக இருப்பது நல்லது' என்றும் கமெண்ட் செய்து வருகிறார்கள்.
2021லயே #CAA-க்கு எதிரா இங்க சட்டமன்றத்துல தீர்மானம் நிறைவேத்தியாச்சு..
— தோழர் ஆதி (@RjAadhi2point0) March 11, 2024
போன மாசம் கூட CM #NoCAAInTamilNadu னு தெளிவா சொல்லிட்டாப்ல..
இந்த Implementation News வந்த உடனே முதல்ல எதிர்த்து வந்த கண்டனக்குரல் CM கிட்டருந்து தான்..
இன்னும் யாருகிட்ட உறுதி அளிக்கணும்? ? https://t.co/mysQFxSsAB
It's better to keep your mouth shut and appear stupid than open it and remove all doubt - Mark Twain. https://t.co/8u2YaJLiMd
— ஆல்தோட்டபூபதி (@thoatta) March 12, 2024
How can a State Govt stop the implementation of #CAA in one State alone? Citizenship is a Union Govt subject. Someone please tell him. #Vijay https://t.co/yGcEO2wfQr
— Sumanth Raman (@sumanthraman) March 12, 2024