செவிலியர்களுடன் தனது படத்தை பார்த்து ரசித்த விஜயகாந்த், வைரல் ட்வீட்..
கேப்டன் விஜயகாந்த் அனைவராலும் மதிக்கத்தக்க நடிகராகவும் நல்ல குணம் படைத்த மனிதராகவும் திகழ்ந்து வருபவர்.
அவ்வப்போது அவருக்கு ஏற்படும் உடல்நல குறைவால் அதிகமாக வெளிநிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் வீட்டிலேயே இருந்து வருகிறார்.
மேலும் சமீபத்தில் விஜயகாந்த் அவரின் மருத்துவ சிகிச்சைக்காக திடீரென அமெரிக்கா சென்றிருந்தார்.
இந்நிலையில் தற்போது அவரின் ட்விட்டர் பக்கத்தில் "நான் நல்ல உடல் நலத்துடன் உள்ளேன். நான் நடித்த 'சத்ரியன்' திரைப்படத்தை, எனது சிகிச்சைக்கு உதவிபுரியும் செவிலியர் சகோதரிகளுடன் பார்த்த போது எடுத்த படம்" என புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார்.
விஜயகாந்த் அவர்களின் இந்த ரீசன்ட் லுக் அனைவரையும் கவர்ந்துள்ளது.
Am doing well. Watching 'Satriyan' movie, with Sisters who taking care of me.
— Vijayakant (@iVijayakant) September 5, 2021
நான் நல்ல உடல் நலத்துடன் உள்ளேன். நான் நடித்த
'சத்ரியன்' திரைப்படத்தை, எனது சிகிச்சைக்கு உதவிபுரியும் செவிலியர் சகோதரிகளுடன் பார்த்த போது எடுத்த படம். pic.twitter.com/QekthdQNz2