RRR படத்தின் நடித்த குழந்தையா இது! இப்போது இவ்வளவு வளர்ந்துட்டாரே.. வைரல் போட்டோ
இயக்குனர் ராஜமௌலியின் இயக்கத்தில் ஆர்ஆர்ஆர் படம் தற்போது வசூல் சாதனை படைத்து வருகிறது. ஒட்டுமொத்த இந்தியா முழுவதும் இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து இருக்கிறது.
ஒரே வாரத்தில் 700 கோடி வசூல்
ஆர்ஆர்ஆர் படம் ரிலீஸ் ஆகி ஒரே வாரத்தில் 700 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் ஈட்டி இருக்கிறது. இந்த தகவல் இன்று வெளியான நிலையில் படம் 1000 கோடி என்ற மைல் கல்லை தொடுமா என்கிற எதிர்பார்ப்பும் ஏற்பட்டு இருக்கிறது.
குழந்தை நட்சத்திரத்தின் போட்டோ
ஆர்ஆர்ஆர் படத்தில் மல்லி என்கிற குழந்தை ரோலில் நடித்து இருந்த பெண்ணின் போட்டோ தற்போது வெளியாகி வைரல் ஆகி வருகிறது.
மல்லி ரோலில் அந்த பெண் நடித்தபோது ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்த போட்டோவும், தற்போது அவர் அடையாளம் தெரியாத அளவுக்கு வளர்ந்து இருக்கும் போட்டோவையும் இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது.
வழக்கமாக ராஜமௌலி தனது படங்களை மூன்று நான்கு வருடங்கள் எடுப்பார் என்பதால் தான் இந்த அளவுக்கு மாற்றம் என தெரிகிறது.