நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் இப்படி ஒரு டுவிஸ்ட்டா?- இதை ரசிகர்கள் எதிர்ப்பார்க்கவில்லையே, செம ஷாக்
விஜய் தொலைக்காட்சியில் படு ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கிறது நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல். இதே டைட்டிலில் முன்பு வேறொரு கதை ஓடியது.
கொரோனாவிற்கு பிறகு கதை, நடிகர்கள் என முற்றிலும் மாறியுள்ளது. ஆனால் மக்களுக்கு என்னமோ ஒரே மாதிரி சில காட்சிகள் வருகின்றன என்பது அன்றாட கருத்தாக உள்ளது.
இந்த சீரியலில் கடந்த சில நாட்களாக ஐஸ்வர்யா-முத்துராசு இருவரின் திருமணம் பற்றிய காட்சிகள் தான் இடம்பெற்று வருகின்றன.
ரசிகர்களுக்கு என்னவோ திருமணம் நடக்காது என்று கமெண்ட் செய்து வருகின்றனர். ஆனால் உண்மையில் அவர்களுக்கு திருமணம் முடிந்துவிடுகிறது.
முத்துராசு நிறைய டுவிஸ்ட் வைத்து ஐஸ்வர்யாவின் குடும்பம் கோவிலில் இருக்கும் போதே திருமணத்தை அவர்களுக்கு தெரியாமல் முடித்துவிடுகிறார்.
அவர்களுக்கு திருமணம் முடிவதை பார்த்த குடும்பம் எதுவும் பேச முடியாமல் அதிர்ச்சியில் நிற்கின்றனர்.