Twisters திரை விமர்சனம்
ஹாலிவுட் திரையுலகில் இயற்கை அழிவுகளை வைத்தே பல படங்கள் வெளிவந்து பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பியுள்ளது.
இந்நிலையில் இயக்குனர் Lee Isaac Chung இயக்கத்தில் டாப் கன் புகழ் Glen நடிப்பில் வெளிவந்துள்ள டுவிஸ்டர் படம் எப்படியுள்ளது, பார்ப்போம்.
கதைக்களம்
படத்தின் ஆரம்பத்திலேயே ஒரு குழு புயல் உருவாவதை தடுக்கும் ஒரு ஆராய்ச்சியை செய்ய டொராண்டோ-விற்கு செல்ல, எதிர்ப்பாராத விதமாக மிகப்பெரும் புயலாக அது உருவெடுக்க, வந்தவர்களில் ஹீரோயின் கேட் தவிற அனைவரும் இறக்கிறார்கள்.
இதனால் இனி பீல்ட் ஒர்க் வேண்டாம் என கேட் நியூயார்க் நகரத்திற்கு குடிபெயர்கிறார். ஆனால், மீண்டும் அந்த குழுவின் இருந்த ஒருவர் கேட்-யை டொராண்டோ-விற்கு அழைக்க கேட் ஆரம்பத்தில் வர மறுக்கின்றார்.
கேட்-ன் திறமை கண்டிப்பாக டொராண்டோ-வில் புயல் ஆராய்ச்சி குழுவிற்கு பயன்படும் என்பதால் நண்பனுக்காக மீண்டும் டொராண்டோ செல்ல, அங்கு சில நாட்கள் கழித்து மிகப்பெரும் புயல் ஒன்று உருவாகிறது. பிறகு இந்த புயலிலிருந்து மீண்டார்களா, அந்த பகுதி மக்கள் காப்பாற்றப்பட்டார்களா என்பதே மீதிக்கதை.
படத்தை பற்றிய அலசல்
படத்தின் ஆரம்பத்திலேயே மிகப்பெரும் அச்சத்தையும் உருவாக்கும் ஒரு புயல் உருவாவுவதை சிஜி என்றாலும் அத்தனை தத்ரூபமாக நம் கண்முன் கொண்டு வந்துள்ளனர்.
ஹீரோயின் கேட் தன் ஆராய்ச்சியில் புயல் உருவாகும் போது தன் ஆராய்ச்சி பொருட்களை அந்த புயலினுள் செலுத்தி அதை கலைக்க வைப்பதே அவர் குறிக்கோள்.
அந்த திட்டம் ஆரம்பத்தில் தோல்வியில் முடிய, தன் நண்பர்கள் இழப்பு, பிறகு மீண்டும் மக்களை காப்பாற்ற ஒரு வாய்ப்பு, அதற்காக தன் உயிரை பணயம் வைத்து எடுக்கும் முடிவுகள் என முழுக்க முழுக்க ஒரு ஹீரோயின் தோள் மேல் தான் கதையே நகர்கிறது.
ஹீரோ க்ளான் எதோ ஹீரோயின் ஆக உதவு ஒரு கருவி போல் தான், அவ்வபோது வந்து செல்கிறார். படம் முழுவதும் பிரமாண்ட புயல் ஆடு, மாடு, வீடு பறப்பது என காட்டாமல் ஒரு உண்மையான புயலின் பாதிப்பு ஒரு ஊரை எப்படி புரட்டி போடும் என்பதை கண்முன் கொண்டு வந்துள்ளனர்.
அதே நேரத்தில் படம் முழுவதும் நிறைய அறிவியல் சார்ந்த பெயர்கள் பேசிக்கொண்டு இருப்பது ஹாலிவுட் கமர்ஷியல் விரும்பிகளுக்கு கொஞ்சம் பொறுமையை சோதிக்கும்.
படத்தின் கிளைமேக்ஸ் ஒரு தியேட்டரில் மக்கள் புயலுக்காக ஒதுங்க, அங்கு ஸ்கிரீன் கிழிந்து அப்படியே வெளியே புயல் தெரிவது அத்தனை பிரமிப்பு. படத்தின் ஒளிப்பதிவு அத்தனை பிரமாண்டத்தையும் குறிப்பாக புயலுக்குள் மாட்டும் போது ஒவ்வொருவரின் ரியாக்ஸனையும் தெளிவாக காட்டியுள்ளனர்.
க்ளாப்ஸ்
படத்தின் டெக்னிக்கல் விஷயங்கள், முக்கியமாக சிஜி ஒர்க்.
ஹீரோயின் கேட் ஆக வரும் Daisy நடிப்பு அற்புதம்.
கிளைமேக்ஸ் காட்சி
பல்ப்ஸ்
நிறைய அறிவியல் சார்ந்த வசனங்கள் எல்லோருக்கும் புரிய வாய்ப்பில்லை.
மொத்தத்தில் இந்த டுவிஸ்டர் கண்டிப்பாக ரசிகர்களும் புயலுக்குள் சென்று வந்த அனுபவத்தை கொடுக்கும்.