ட்விட்டரில் வெங்கட் பிரபுவை வெளுத்து வாங்கும் கமல் ரசிகர்கள்! என்ன காரணம் தெரியுமா?
வெங்கட் பிரபு தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் ஒருவராக உள்ளார், இவரின் இயக்கத்தில் பல சூப்பர் ஹிட் திரைப்படங்கள் வெளியாகியுள்ளது.
மேலும் இவர் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் மாநாடு திரைப்படம் நவம்பர் 25 ஆம் தேதி வெளியாகவுள்ளது, இப்படத்திற்காக ரசிகர்கள் அனைவரும் காத்துகொண்டு இருக்கின்றனர்.
இந்நிலையில் நாளை வெங்கட் பிரபு பிறந்தநாள் என்பதால் ரசிகர் ஒரு இது குறித்து ட்வீட் போட்டுள்ளார். அதில் நாளை (நவம்பர் 7) பிறந்த நாள் கொண்டாடும் தமிழ்த் திரையுலகில் நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர் என்று பன்முகத் திறமை கொண்ட சகலகலாவல்லவர் வெங்கட் பிரபு. அவர்களுக்கு முன் கூட்டிய இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்" என பதிவிட்டுள்ளார்.
அதற்கு பதிலளித்துள்ள வெங்கட் பிரபு "அவ்ளோ பில்ட் அப் பாத்த உடனே, தப்பா என்ன டேக் பண்ணிட்டீங்க-னு நெனச்சேன். அப்பறம் தான் உள்குத்து புரியுது" என பதிவிட்டுள்ளார்.
இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து கமல் ரசிகர்கள் வெங்கட் பிரபு குறித்து திட்டி பதிவிட்டு வருகின்றனர்.
நாளை (நவம்பர் 7) பிறந்த நாள் கொண்டாடும் தமிழ்த் திரையுலகில் நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர் என்று பன்முகத் திறமை கொண்ட சகலகலாவல்லவர் @vp_offl அவர்களுக்கு முன் கூட்டிய இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள். வாழ்க வளமுடன் & நலமுடன்.
— மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் ? (@mayavarathaan) November 5, 2021