இந்திய அளவில் நடிகர் சூர்யாவிற்கு பெருகிவரும் ஆதரவு, அதிருகிறது ட்விட்டர் !

twitter surya jai bhim
By Jeeva Nov 15, 2021 10:10 AM GMT
Report

தமிழில் முன்னனி நடிகராக இருக்கும் சூர்யா நடித்து சமீபத்தில் ஜெய் பீம் திரைப்படம் நேரடியாக OTT தளமான அமேசானில் வெளியாகியிருந்தது.

படத்தில் நடிகர் சூர்யாவுடன் நடிகர்கள் மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ், ரஜிஷா விஜயன், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

படம் வெளிவந்து மக்களிடையே பெரும் ஆதரவை பெற்றிருக்கும் நிலையில் அரசியல் தலைவர்கள், திரைத்துறை பிரபலங்கள் முதல் நீதித்துறையை சேர்ந்தவர்கள் வரை பலரும் படக்குழுவினருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் தான் படத்தில் வன்னியர் சமூகத்தை சேர்ந்தவர்களை புன்படுத்தும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டிருப்பதாக கூறி அரசியல் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் படக்குழுவினர் மீது குற்றம் சாட்டியிருந்தார்.

மேலும் அவர் சூர்யாவிற்கு பல்வேறு கேள்விகளை எழுப்பி கடிதம் ஒன்றையும் வெளியிட்டு அதற்கு சூர்யா பதிலளிக்க வலியுறுத்தி இருந்தார்.

இதனையடுத்து இணையத்திலும் நடிகர் சூர்யாவிற்கு எதிராக கண்டனங்கள் எழ தொடங்கின. தற்போது சூர்யாவை ஆதரிக்கும் வகையில் அவரது ரசிகர்கள் Westandwithsuriya என்ற ஹாஷ்டேக்கை ட்விட்டரில் ட்ரெண்டிங் ஆக்கி வருகின்றனர். 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US