இணையத்தில் பெரியளவில் பேசப்படும் பிரபலங்களின் செயல்! தளபதி விஜய்யை பின்தொடரும் தயாரிப்பாளர்
தளபதி விஜய்
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர் தளபதி விஜய், தற்போது இயக்குநர் வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார். பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அப்படத்தின் ஷூட்டிங் ஹைதராபாத்தில் நடைபெற்று வந்தது.
அப்படத்தை தொடர்ந்து விஜய் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அவரின் 67-வது திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். அப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு அடுத்த மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் தற்போது இணையத்தில் முக்கிய பிரபலங்களின் செயல் ரசிகர்களிடையே பேச்சுப் பொருளாகி உள்ளது. Aashirvad Cinemas நிறுவனத்தின் தயாரிப்பாளர் Antony Perumbavoor இவர் நடிகர் மோகன்லாலின் நெருங்கிய நபர்.
டிவிட்டரில் வைரல்
இவர் தற்போது அவரின் டிவிட்டர் பக்கத்தில் நடிகர் விஜய்யை பின் தொடர்ந்து இருக்கிறார். அதே போல் நடிகர் மோகன்லால் டிவிட்டர் பக்கத்தில் இயக்குநர் லோகேஷ் கனகராஜை பின் தொடர்ந்து இருக்கிறார்.
முக்கிய நட்சத்திரங்கள் இணையத்தில் செய்துள்ள இந்த விஷயம் ரசிகர்களிடையே பெரியளவில் பேசப்படும் ஒரு விஷயமாக மாறியிருக்கிறது.
சினேகா மற்றும் பிரசன்னா வைத்த பார்ட்டியில் கலந்து திரையுலக நட்சத்திரங்கள்