விஜய் டிவியின் கண்மணி அன்புடன் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் 2 பிரபலங்கள்... வீடியோவுடன் இதோ
கண்மணி அன்புடன்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் நிறைய ஹிட் ஜோடிகள் உள்ளார்கள். முத்து-மீனா, நிலா-சோழன், கதிர்-ராஜி என இப்படி நிறைய சொல்லிக்கொண்டே போகலாம்.
இந்த ஹிட் ஜோடி வரிசையில் ரசிகர்களால் கொண்டாடப்படும் ஜோடி தான் அன்புடன் கண்மணி சீரியல் புகழ் அன்பு மற்றும் கண்மணி. மதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் இந்த சீரியல் ஆரம்பிக்கும் போது இருந்த கதைக்களத்தில் இருந்து மாறுபட்டு உள்ளது.

புதிய என்ட்ரி
கதையில் தனது குடும்பத்தை அவமானப்படுத்திய பாட்டியை ஒன்றும் கேட்காமல் தன்னை மன்னிப்பு கேட்க சொன்ன அன்புவிடம் இருந்து விலகியிருந்தார் கண்மணி.
ஆனால் விதியால் JP ரெஸ்டாரன்ட் மூலம் இருவரும் ஒன்றாக பணிபுரிய அன்புவிற்கு அப்போது தான் செய்தது தவறு என்பது புரிய வருகிறது.

அவர் கண்மணியிடம் எவ்வளவோ மன்னிப்பு கேட்டும் கண்மணி மனம் மாறுவது போல் தெரியவில்லை. பாட்டி சூழ்ச்சியில் சிக்கிய கண்மணி, அன்புவை விவாகரத்து செய்ய கையெழுத்து போட்டுவிட்டார்.

இப்போது வந்துள்ள புதிய புரொமோவில், அன்பு-கண்மணி விவாகரத்து வழக்கு நீதிமன்றம் வர இவர்களுக்காக 2 நடிகர்கள் வக்கீலாக களமிறங்குகிறார்கள். அவர்கள் யார் யார் என்ற விவரம் வீடியோவுடன் இதோ,